Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆன்லைன் பரிதாபங்கள்: லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு நாய் உணவை டெலிவரி செய்த அமேசான் !

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதிலிருந்து பலரும் தங்கள் மொபைல்களிலேயே தனக்கான பாதி வேலைகளை செய்து முடித்துவிடுகின்றனர். ஸ்மார்ட்போன் பயனர்களிடையே பிரபலமான ஒன்று ஆன்லைன் ஷாப்பிங், பலரும் தங்களுக்கு விருப்பப்பட்ட பொருட்களை ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்து கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கம் அதிகரித்து இருக்கிறது என்றே சொல்லலாம், வெளியே செல்லாமல் வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து கொள்வதால் நமக்கு நேரமும் மிச்சமாவதோடு அலைச்சல் இல்லாமலும் போகிறது. அதே சமயம் ஆன்லைனில் நாம் வாங்கக்கூடிய அனைத்து பொருட்களும் உண்மையாகவே தரமானதாக தான் இருக்கின்றதா என்றால் கண்டிப்பாக இல்லை.ஆர்டர் செய்ததோ ரூ.1.2 லட்சம் ...

நாம் எதிர்பார்த்தபடியே எல்லா பொருளும் நமக்கு வந்து சேர்வதில்லை, பல தவறான பொருட்களும் டெலிவரி செய்யப்பட்டுள்ள சம்பவத்தை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். வெங்காயம் ஆர்டர் செய்தவருக்கு ஐபோன் வந்தது, விலையுயர்ந்த மொபைல் ஆர்டர் செய்தவருக்கு சேதமடைந்த பர்ஸ் வந்தது போன்ற பல விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம். இப்போது அந்த வரிசையில் லேட்டஸ்டாக ஒரு டெலிவரி சேர்ந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த ஆலன் வூட் என்பவர் கடந்நத நவம்பர் 29ம் தேதியன்று அமேசானில் தனது மகளுக்காக சுமார் ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள மேக்புக் ப்ரோ லேப்டாப்பை மறுநாளே டெலிவரி செய்ய வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஆர்டர் செய்துள்ளார்.ஆர்டர் செய்ததோ ரூ.1.2 லட்சம் ...

ஆலனின் கோரிக்கைப்படியே மறுநாளும் பார்சல் வந்தது, அந்த பார்சலை திறந்த பார்த்தவுடன் அவர் அதிர்ச்சியாகியுள்ளார். அப்படி அவர் அதிர்ச்சியாகும் அளவிற்கு அந்த பார்சலில் என்னதான் இருந்தது என்றால், அந்த பார்சலில் அவர் ஆர்டர் செய்த லேப்டாப்பிற்கு பாதிலாக நாய்களின் உணவான பெடிக்ரீ இருந்துள்ளது. பின்னர் அவர் அமேசான் நிறுவனத்தை தொடர்புகொண்டு பேசியுள்ளார், ஆரம்பத்தில் நிறுவனம் அவருக்கு பணத்தை திருப்பி தர மறுத்துள்ளது. அதன் பிறகு நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பிறகு அமேசான் நிறுவனம் தனது தவறுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டதுடன் பணத்தை திருப்பி தரவும் ஒப்புக்கொண்டுள்ளது.

Exit mobile version