பாலியல் வழக்குகளில் குற்றம் புரிந்தவரை எளிதில் அறியும் சோதனை! – நீதிபதி!
இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே விஷயம் ஏறுவது போல் பாலியல் வன்கொடுமை வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. இந்த வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிவது என்பது போலீசாருக்கு மிகவும் கடுமையான மற்றும் சவாலான ஒன்றாகவே உள்ளது. இதில் சில நிரபராதிகள் கூட போலீசாரின் சந்தேக வளையத்திற்குள் சிக்கி விடுகின்றனர்.
அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதும் இருப்பதற்கும், உண்மையான குற்றவாளிகளை அறிவதற்கும், போலிசாரின் உதவியுடன் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களும் உதவுகின்றன. அவற்றில் ஒன்றாக மரபணு பரிசோதனை பெரும் பங்காற்றுகின்றது. இது பற்றி சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் கூறும் போது, பாலியல் குற்றங்கள் மற்றும் கொலைகள் ஆகிய வழக்குகளில் இந்தியாவில் உள்ள பல நீதிமன்றங்கள் வலுவான மற்றும் திறன் வாய்ந்த தீர்ப்புகளை தற்போது உடனுக்குடன் வழங்க முடிகிறது.
துள்ளிய தன்மை கொண்ட மரபணு சான்றுகளின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளில் கூட இது போன்ற தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்குகின்றனர். மரபணு சான்றின் உதவியுடனேயே குடியாவின் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கூட தீர்வு காணப்பட்டது. வருங்கால விசாரணைகளுக்கு இதனை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். குடியா வழக்கில் சிபிஐ சேகரித்த மதுபான பாட்டில்கள், உயிரணுக்கள், ரத்த மாதிரிகள், சம்பவ பகுதியில் கிடைத்த களிமண் மற்றும் அது போன்ற பிற சான்றுகளும் வழக்குக்கு பயன்பட்டன.
இதுபோன்ற வழக்குகளில் மரபணு சார்ந்த தீர்ப்புகளை கட்டமைப்பதற்கு அதிகம் உதவுகிறது. அதனால் குற்றப்புலனாய்வு பல நாடுகளில் இந்த பரிசோதனை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை 70 நாடுகள் மரபணு தரவுகளை சேகரித்து வைக்கும் நடவடிக்கைகளை அமல்படுத்தி உள்ளன. இதன் காரணமாக குற்றங்கள் மீண்டும் நடைபெறுவது கட்டுப்படுத்த உதவுகின்றது. சான்றுகளின் முறையான சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிலும் நன்றாக பயிற்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது. என தடயவியல் ஆய்வக உதவி இயக்குனரான மருத்துவர் விவேக் சஹஜ்பால் கூறுகிறார்.
குடியா வழக்கில் தடயவியல் மரபணு தொழில்நுட்பத்தில் உண்மையான ஆற்றலை விளக்கும் வகையில் அமைந்தது. இந்த வழக்கில் சிபிஐ அமைப்பின் முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட, சந்தேக நபர்களின் குற்ற சம்பவம் அப்பகுதியில் கிடைத்த மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலில் இருந்து கிடைத்த மரபணுவுடன் ஒத்துப்போகவில்லை. அதன் காரணமாக அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான நபர்களை விசாரித்து 250 பேரிடம் இருந்து மரபணுக்கள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன.
அதில் ஒரு மரபணு மாதிரி குற்றவாளியின் தாயாரின் மரபணுவுடன் ஒத்துப் போனது. இதனால் உண்மையான குற்றவாளியின் அடையாளம் தெரிய வந்தது. மேலும் தொடர் விசாரணையில் அந்த நபர் தொடர்ச்சியாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது. சர்வதேச குற்ற நீதி முறையில் மரபணு தடயவியல் பரிசோதனையானது, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரிய உறுதுணையாக அமைந்துள்ளது. விசாரணையை முன்னெடுத்துச் செல்வதிலும் உண்மையான குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும், சந்தேக நபர்கள் அல்லது தவறாக குற்றம் சாட்டப்பட்டவர்களை பிரித்து அறியவும் ஒரு வழியைக் காட்டுகிறது என்றும் கூறினார்கள்.