வயது முதிர்வு காரணமாக எழுந்து நிற்காக முடியாத யானையை கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைத்தனர்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள காந்தளூர் சிவன் கோவிலில் கடந்த சில வருடங்களாக திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான ஸ்ரீகண்டேஸ்வரம் சிவக்குமார் என்ற 70 வயதுடைய யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு படுத்த யானை இன்று காலை எழுந்து நிற்காக முயன்ற போதும் யானையால் எழுந்து நிற்காக முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியினர் மற்றும் கோயில் நிர்வாகிகள் யானையை எழுப்ப முயன்றனர்.
ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. பின்னர் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்து மருந்து மற்றும் குளுக்கோஸ் கொடுத்தார். இருப்பினும், யானையால் எழுந்து நிற்காக முடியாததால் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டது.
கால்கள் மற்றும் கொம்புகளில் கயிறு கட்டி தூக்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. வேறு வழியில்லாமல் சிவக்குமார் யானையை தூக்க கிரேன் கொண்டுவரப்பட்டு கிரேன் உதவியுடன் யானையை தூக்கி எழுந்து நிற்காக வைத்தனர்.கடந்த சில தினங்களாக வயது முதிர்வு காரணமாக யானையால் படுத்தால் எழுந்து நிற்காக முடியாமல் அவதிபட்டு வருகிறது.