Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜெர்மன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியர் கைது!

#image_title

புதுச்சேரியில் இருந்து பெங்களூர் சென்ற தனியார் பேருந்தில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த பொங்களுரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை சக பயணிகள் அடித்து பேருந்தில் இருந்து கீழே இறக்கி விடும் வீடியோ வெளியாகி உள்ளது மேலும் அந்த வாலிபரை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஜனா ஷ்விங்க் (20). இவர் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் தன்னார்வலராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவர் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி பெங்களுருக்கு சுற்றுலா செல்ல புதுச்சேரியில் இருந்து தனியார் பேருந்தில் டிக்கெட் பூக் செய்து பேருந்து நிலையம் அருகே இருந்து பேருந்தில் பயணத்தை தொடங்கி உள்ளார்.

அப்போது பேருந்து தமிழக பகுதியான திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்த போது 24 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் ஜனா ஸ்விங்கிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பாரத அவர் அதிர்ச்சியில் கூச்சலிட்டதில் சக பயணிகள் அந்த வாலிபரை அடித்து பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர். இதனை சில பயணிகள் வீடியோவாக எடுத்ததை அடுத்து அந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் இது தொடர்பாக ஜனா ஸ்விங் ஈ மெயில் மூலமாக புதுச்சேரி காவல் துறைக்கு அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கை உருளையான் பேட்டை காவல் ஆய்வாளர் பாபுஜி தலைமையிலான போலீசார் விசாரணையை துவக்கினர்.

அப்போது அந்த நபரின் செல்போஃன் எண் மற்றும் அந்த வீடியோவை கொண்டு கடந்த 25 நாட்களாக விசாரணை செய்ததில் பெங்களூர் பவானி நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சரத் (25) என்பவரை கைது செய்தனர்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தனது தோழியுடன் புதுச்சேரி வந்து விட்டு மீண்டும் பெங்களூருக்கு உச்சகட்ட மது போதயையில் செல்லும் போது இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டதாகவும்.

இதனால் அவர் அருகே இருக்கையில் தனியாக அமர்ந்திருந்த வெளிநாட்டு பெண்ணான ஜனா ஸ்விங் அருகே சென்று அமர்ந்து பேசிய போது அந்த பெண்ணும் நட்பாக பேசியதால் தான் அந்த வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாகவும் அப்போது அந்த பெண் கூச்சலிட்டதில் சக பயணிகள் தன்னை அடித்து திண்டிவனத்தில் இறக்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Exit mobile version