Amaran movie:அமரன் படக்குழுவினருக்கு ரூ.1.1 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பொறியியல் மாணவன்.
அமரன் திரைப்படம் 2024 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி இந்த வருட ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் பெரியசாமி இயக்குனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்து. இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் பையோ கிராபியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும். இப் படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார்.
கதாநாயகியாக சாய் பல்லவி நடித்து இருந்தார். இது சிவா கார்த்திகேயன் திரை உலகில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது. சிவகார்த்திகேயன் திரைப் படங்களில் அதிக வசூல் செய்த படமாக இது உள்ளது. இந்த நிலையில் அமரன் படத்தில் ஒரு போன் நம்பரை சாய் பல்லவி தோன்றும் காட்சியில் பயன்படுத்தியதற்கு சிக்கில் எழுந்து இருக்கிறது.
அதாவது அமரன் படத்தில் சாய் பல்லவி கதாப்பாத்திரத்தின் போன் நம்பர் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த போன் நம்பர் நிஜத்தில் சென்னையை சேர்ந்த பொறியியல் மாணவர் வாகீசன் என்பவருடையது ஆகும். எனவே அமரன் படம் வெளியான நாள் முதல் தனக்கு பல போன கால்கள் வருவதாகவும் அதில் நடிகை சாய் பல்லவி இருக்காங்களா என கேள்வி எழுப்பி தொல்லை செய்வதாக கூறினார்.
மேலும் இது போன்ற போன் கால்கள் வருவதால் என்னால் சரி வர தூங்க முடிவதில்லை, படிக்கவும் முடியவில்லை ஒரே நாளில் தொடர்ச்சியாக போன் கால்கள் வருகிறது என்றார்.மேலும் அமரன் படக்குழுவிற்கு எந்தவித அறிவிப்பும் இன்றி என்னுடைய போன் நம்பரை திரைப்படத்தில் பயன்படுத்தியதற்கு நஷ்ட ஈடாக ரூ.1.1 கோடி கேட்டு மாணவர் வாகீசன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதற்கு முன்பாக முஸ்லிம் மதத்தினரை தீவிரவாதியாக அமரன் படம் சித்தரிக்கிறது என கூறி தமிழகத்தில் முஸ்லிம் அமைப்பினர் திரையருங்குகள் முன் போராட்டங்கள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.