Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! நியாய விலை கடைகளில் இனி இந்த முறையில் தான் பொருட்களை வாங்க முடியும் கவனிச்சுக்கோங்க!!

#image_title

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! நியாய விலை கடைகளில் இனி இந்த முறையில் தான் பொருட்களை வாங்க முடியும் கவனிச்சுக்கோங்க!!

இன்றைய சூழலில் விலைவாசி உயர்வு தொடர்ந்து ஏறுமுகமாவே இருந்து வருகிறது.இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் தினசரி நாட்களை நகர்த்த பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்கள் தான்.ரேஷனில் அரிசி,கோதுமை,துவரம் பருப்பு,எண்ணெய்,சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இதில் அரசி மற்றும் கோதுமை இலவசமாகவும் அதேசமயம் எண்ணெய்,சர்க்கரை,துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பொருட்கள் ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.இந்த பயனுள்ள திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வருகிறது. ரேஷன் அட்டைகளில் PHH,NPHH,PHH – AAY,NPHH – S மற்றும் NPHH – NC என்று 5 வகைகள் இருக்கிறது.இதில் PHH – AAY ,PHH மற்றும் NPHH உள்ளிட்ட ரேஷன் அட்டைகளுக்கு அரிசி,சர்க்கரை,பாமாயில், மண்ணெண்ணெய்,துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.அதேபோல் NPHH – S அட்டை வைத்திருப்பவர்கள் சர்க்கரை மட்டும் வாங்கிக் கொள்ள முடியும்.

அரசி மற்றும் கோதுமை இலவசமாகவும்,1 கிலோ துவரம் பருப்பு ரூ.30,பாமாயில் 1 லிட்டர் ரூ.25,சர்க்கரை 1 கிலோ ரூ.13 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முன்பெல்லாம் நியாயவிலை கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் சிறு புத்தகம் அமைப்பில் பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்த நடைமுறை கடந்த 2016 வரை நீடித்தது.இதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ரேஷன் புக் ஆனது ஸ்மார்ட் ரேஷன் கார்டு வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஸ்மார்ட் கார்டு திட்டம் வந்த பிறகு “பயோ மெட்ரிக்” முறை அறிமுகம் செய்யப்பட்டது.இதன்படி ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் “பயோ மெட்ரிக்” முறையுடன் சேர்த்து கருவிழி பதிவு முறையும் அறிமுகமாகி இருக்கிறது.கை ரேகைக்கு அடுத்து கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்களை மக்கள் பெறும் வகையில் புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

முதற்கட்டமாக தமிழகத்தில் 36,000 ரேஷன் கடைகளில் இந்த கருவிழி பதிவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் மீதம் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்னும் 2 மாதங்களில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version