Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு வெங்காயம் இருந்தால் உங்கள் தொடை இடுக்குகளில் உள்ள கருமையை ஒரு இரவில் நீக்கி விடலாம்!!

An onion can remove dark spots on your thighs overnight!!

An onion can remove dark spots on your thighs overnight!!

ஒரு வெங்காயம் இருந்தால் உங்கள் தொடை இடுக்குகளில் உள்ள கருமையை ஒரு இரவில் நீக்கி விடலாம்!!

உங்களில் பலருக்கு தொடை இடுக்குகளில் உள்ள சதை பகுதி அதிகளவு கருமையாக இருக்கும்.இவை பிறப்பில் இருந்தே அனைவருக்கும் இருப்பதில்லை.இந்த கருமை நிறம் வரக் காரணம் நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம்.

அணியும் உள்ளாடைகள் சுத்தமாக இருக்க வேண்டும்.உள்ளாடைகள் ஈரமாக இருந்தால் அவை தொடை பகுதியில் ஒரு வித எரிச்சலை உண்டு செய்யும்.இதனால் அந்த பகுதி நாளடைவில் கருமையாக மாறி விடும்.

அதுமட்டும் இன்றி சிறுநீர் கழித்த பின்னர் அவ்விடத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து விட வேண்டும்.இல்லையென்றால் தொடை இடுக்குகளில் அரிப்பு,தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

மாதவிடாய் காலத்தில் பெருமபாலான பெண்களுக்கு தொடை இடுக்குகளில் எரிச்சல்,புண் ஏற்படும்.இவை நாளடைவில் கருமையாக மாறிவிடும்.

இந்த தொடை இடுக்கு கருமையை வீட்டில் உள்ள பொருட்கள் மூலம் போக்கி விட முடியும்.

தீர்வு 01:-

*வெங்காயம்

ஒரு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்டை தொடை இடுக்குகளில் காணப்படும் கருமை மீது தடவி வந்தால் அவை விரைவில் மறைந்து விடும்.

தீர்வு 02:-

*ஆப்பிள் சீடர் வினிகர்
*தண்ணீர்

ஒரு கிளாஸ் அளவு நீரில் 1 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து ஒரு பஞ்சில் அந்த நீரை நினைத்து தொடை இடுக்குகளில் துடித்து வந்தால் அந்த பகுதியில் காணப்படும் கருமை நீங்கும்.

Exit mobile version