Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதுகலை பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு !! 1895 காலி பணியிடங்கள்!

An opportunity for postgraduates to learn! 1895 vacancies

An opportunity for postgraduates to learn! 1895 vacancies

முதுகலை பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு !! 1895 காலி பணியிடங்கள்!

தமிழக அரசு கலை  மற்றும்அறிவியல்   கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர்  பணிகளுக்கு விண்ணபிக்குமாறு முதுகலை பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உரிய தகுதி அடிப்படையில் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி டிசம்பர் – 29.

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல்  கல்லூரிகளில்  தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர் பணிக்குரிய தேர்வு  என்பது இணையவழியான  விண்ணப்பபதிவு, மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதாக அமையும். விண்ணப்பதாரர் பதிவு, விண்ணப்பத்திற்கான  தகவல்களினை பதிவு செய்தல், பதிவு செய்வதற்கான விண்ணப்பகட்டணம் செலுத்துதல், சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தல் மற்றும் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்தல் ஆகிய அனைத்தும் இணையவழியாகவே நடைபெறும்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களைப் பெற  www.tngasa.in இணையதளத்தை  அணுகவும்

Exit mobile version