பொதுவாக பெண்களுக்கு காதலை வித்தியாசமான முறையில் தன்னிடம் தெரிவிக்கு ஆணை மிகவும் பிடிக்கும், அதேபோல ஆண்களும் தங்களுக்கு பிடித்த பெண்ணிற்கு வித்தியாசமான முறையில், வியக்கதைக்கும் வகையில் ப்ரொபோஸ் பண்ண வேண்டும் என்கிற ஆசை இருக்கும். இதற்காக ஒவ்வொரு நபரும் பல்வேறு முயற்சிகளை எடுத்து தங்களை பிடித்த பெண்ணை கவர நினைக்கின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு பட்டதாரி இளைஞன் தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் அனைவரது முன்னிலையிலும் தனது காதலை வெளிப்படுத்திய சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
அமெரிக்காவின் மத்திய மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்திருப்பவர் டேவிட். இவர் தனது கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார், அப்போது தனக்கான பட்டத்தை வாங்கியவர் யாரும் எதிர்பார்த்திடாத வகையில் மேடையில் தனது காதலியை அழைத்து மண்டியிட்டு அவருக்கு மோதிரத்தை அணிவித்து தனது காதலை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார். டேவிட்டின் செயலை கண்டு மெய்சிலிர்த்து அவரது காதலி வெக்கத்துடன் டேவிட்டின் காதலை ஏற்றுக்கொண்டார், பின்னர் இருவரும் தங்களது காதலை முத்தத்தங்களால் பரிமாறிக்கொண்டனர்.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள் கைதட்டி அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினர். இந்த ப்ரொபோஸ் சீனை பார்த்த பெண்களில் பலர் இனிமேல் தங்கள் காதலனும் தனக்கு இதுபோன்று வியக்கத்தக்க வகையில் ப்ரொபோஸ் செய்யவேண்டும் என எதிர்பார்த்தாலும் பார்ப்பார்கள். அதுமட்டுமின்றி இதுபோன்று பட்டமளிப்பு விழாவில் ப்ரொபோஸ் செய்யும் காட்சி நமது பகுதியில் நடந்திருந்தால் கைதட்டி சம்பவம் கலவரமாக மாறியிருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.