Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாரமங்கலத்தில் நடந்த எதிர்பாராத விபத்து? பரபரப்பில் அப்பகுதி!!

தாரமங்கலத்தில் நடந்த எதிர்பாராத விபத்து? பரபரப்பில் அப்பகுதி!!

தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் செந்தில்வேல். இவருடைய வயது 38 இவர் கூலி தொழிலை செய்து வந்து தன் குடும்பத்தை காத்துவந்தார். நேற்று முன்தினம் இரும்பாலை அருகே உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

மாலை நேரம்  என்பதால் மீண்டும் மோட்டார் சைக்கிளில்  வீட்டுக்கு திரும்பிச் சென்றிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அவருக்கு பின்னால் வந்த இருசக்கர வாகனம் அவர் மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். அருகில் பார்த்த பொதுமக்கள்  அலறியடித்து ஓடிவந்து  உடனடியாக அவரை மீட்டனர்.பின்னர்  விரைவாக  ஆம்புலன்ஸ்  வரவழைத்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.இவ்விபத்து காரணமாக அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம்  போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.முதல் கட்ட விசாரணையாக செந்தில் வேலுக்கு முன்பகை காரணமா இவ்விபத்து ஏற்படுத்தினாரா? என பல்கோண விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Exit mobile version