நிகழப்போகும் சூரிய கிரகணம் : யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்ன்னு தெரியுமா?
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய பட்சம், மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால், அன்றைய நாளில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
வரும் சனிக்கிழமை, அக்டோபர் 1ம் தேதி காலை 08:34 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி மதியம் 2.25 மணிக்கு முடிவடைகிறது. ஆனால், இந்த நேரம் இந்தியாவில் இரவில் நடைபெறுகிறது.
இந்த சூரிய கிரகணத்தால் யாருக்கெல்லாம் நன்மை கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் –
மிதுனம்:
நிகழப்போகும் சூரிய கிரகணத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு நிதிநிலைமை சீராக இருக்கும். நீங்கள் வேலைசெய்யும் இடத்தில் பணிகள் சிறப்பாக முடிவடையும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
சிம்மம்
நிகழப்போகும் சூரிய கிரகணத்தால் சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் அள்ளி கிடைக்கப்போகிறது. உங்களின் செல்வாக்கு உயரப்போகிறது.பணி செய்யும் இடத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள்.குடும்ப வாழ்க்கை சிறக்கும். தொழில், வியாபாரம் லாபத்தை கொடுக்கும்.
துலாம்
நிகழப்போகும் சூரிய கிரகணத்தால் துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். வெற்றிகளும், பாராட்டுக்களும் உங்களை வந்து சேரும்.தொழில் சிறக்கும். வேலைகளை வெற்றிகரகமாக முடிப்பீர்கள்.