விஜய் -யின் 70-வது திரைப்படம் குறித்து இயக்குனர் கொடுத்த அப்டேட் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !  

0
115
An update from the director on Vijay's 70th film

Cinema: தளபதி விஜயின் 69 கடைசி படம் இல்லையா? வெளியான 70-வது படத்தின் அப்டேட்.

நடிகர் விஜய்  தனது  18 வயதில் 1992 ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக   அறிமுகமாகி   திரையுலக பயணத்தை தொடங்கினார். தமிழ் சினிமாவில்  30 வருடங்களுக்கு மேலாக பயணித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர்.

தமிழ் சினிமாவில் தன் நடிப்பால் உச்ச நட்சத்திர உயரத்தை எட்டியுள்ளார்.
இவர் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழக கட்சியை  அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு  வருகின்ற ஞாயிற்றுக்கிழமை  விக்கிரவாண்டி “வி” சாலையில் நடைபெற உள்ளது.
அம் மாநாட்டிற்கான பணிகள் முடியும் தருவாயில் இருக்கிறது. நடிகர் விஜய் தனது திரை பயணத்தை முடித்துக்கொண்டு, முழு அரசியலில் இறங்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
இயக்குனர் H.வினோத்  இயக்கத்தில் விஜய் தன்னுடைய 69 வது கடைசித்  திரைபடத்தை  நடிக்க  தொடங்கியுள்ளனர்.  இந்த திரைப்படம் விஜய்-ன் கடைசி படமாக இருந்தது. இந்நிலையில் இயக்குனர் அட்லீ  இயக்கும் இந்தி மொழி படத்தில் (70-வது) நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.