Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாளுக்கு நாள் அதிகரிக்கும் அராஜகம்! தேசிய மகளிர் அணி வீராங்கனையின் தலையை வெட்டிய தலீபான்கள்!

Anarchy increasing day by day! The Taliban cut off the head of the national women's team player!

Anarchy increasing day by day! The Taliban cut off the head of the national women's team player!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் அராஜகம்! தேசிய மகளிர் அணி வீராங்கனையின் தலையை வெட்டிய தலீபான்கள்!

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கைவசமானது. அவர்கள் பதவி ஏற்றதிலிருந்து அங்கு பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல கொடூரமான தண்டனை கொடுத்து மக்களை துன்புறுத்தி வருகின்றனர். அவர்கள் அரசை தனியாக உருவாக்கி அவர்களே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

அவர்கள் புதிது புதிதாக சட்டதிட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். தற்போது ஆப்கானிஸ்தான் தேசிய ஜூனியர் மகளிர் அணியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் தலையை தலிபான்கள் துண்டித்ததாக ஒரு பயிற்சியாளர் பாரசீக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அந்த பயிற்சியாளர் சுரையா அப்சாலி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இவ்வாறு கூறினார்.

தலீபான்களால் மஹ்ஜபின் ஹகிமி என்ற பெண் வீராங்கனை கொல்லப்பட்டார். ஆனால் இந்த கொடூரமான கொலை பற்றி யாரும் அறியவில்லை. ஏனெனில்  இதைப் பற்றி பேச வேண்டாம் என்றும் அவளுடைய குடும்பம் அச்சுறுத்தப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தலீபான்கள் முழுமையான கட்டுப்பாட்டை எடுப்பதற்கு முன்பு அணியின் இரண்டு வீரர்களால் மட்டுமே நாட்டிலிருந்து தப்பிக்க முடிந்தது.  மஹாஜபின் ஹகிமி பல துரதிருஷ்டவசமான பெண் விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருந்தார்.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள்  கைபற்றியதை அடுத்து பெண் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு வேட்டையாட ஆரம்பித்தார்கள். ஆப்கானிஸ்தானின் மகளிர் கைப்பந்து அணியின் உறுப்பினர்களை தேடுவதில் அவர்கள் அதிக ஈடுபாடு காட்டினார்கள். ஏன் என்றால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்று, கடந்த காலங்களில்  அவர்கள் ஊடகங்களில் தோன்றியுள்ளனர்.

வாலிபால் அணியின் அனைத்து பெண் விளையாட்டு வீரர்களும், மோசமான சூழ்நிலையிலும், விரக்தியிலும், பயத்திலும் உள்ளனர். அனைவரும் தப்பி ஓடி மறைந்து  வாழ வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார். ஆப்கானிஸ்தான் தலீபான்களிடம் வீழ்ச்சி அடைவதற்கு முன்னர் காபூல் நகராட்சி கைப்பந்து கிளப்பில் மஹ்ஜபின்  விளையாடி வந்தார்.

மேலும் அவர் கிளப்பின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகவும் இருந்தார். பின்னர், சில நாட்களுக்கு முன்பு, அவரது துண்டிக்கப்பட்ட தலை மற்றும் ரத்தம் தோய்ந்த படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது. கடந்த வாரம், பிபா மற்றும் கத்தார் அரசு ஆப்கானிஸ்தானின்  தேசிய கால்பந்து அணி உறுப்பினர்கள் மற்றும்  அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 100  வீராங்கனைகளை  வெளியேற்றினர்.

 

https://twitter.com/sahraakarimi/status/1450524629097984005

 

Exit mobile version