மத்தியில் தொடந்து பாஜக மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பதால் மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் ஹிந்தியை கொண்டு வர முயற்சிக்கிறது. ஆனால், ஆளும் திமுக அரசு இதை கடுமையாக எதிர்க்கிறது. யார் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். ஆனால், எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்பதே தமிழக அரசின் கொள்கையாக இருக்கிறது. இதனால் கோபமடைந்த மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினர்.
அவர் அப்படி சொன்னது தமிழத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக தவறான பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது திமுகவினர் மிகவும் மோசமானவர்கள். அநாகரீகமானவர்கள். ஜனநாயகம் இல்லாதவர்கள்.. தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் மீது அக்கறை இல்லாதவர்கள். தமிழக மக்களிடம் அவர்கள் நேர்மையாக இல்லை’ எனவும் பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு வரவே அவர் தன் வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ‘தமிழ்நாட்டில் 1.09 கோடி மாணவர்கள் 58,779 பள்ளிகளில் மாநில பாடத்திட்ட கல்வியை தேர்வு செய்துள்ளனர். 1635 சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே மும்மொழியை படிக்கிறார்கள். 3வது மொழியான ஹிந்தியை படிக்க அவசியம் இருந்தால் ஏன் இவ்வளவு பேர் மாநில பாடத்திட்டத்தை தேர்வு செய்துள்ளனர்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.