Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அன்புமணி ராமதாஸின் வலியுறுத்தல்! ரத்து செய்யுமா தமிழக அரசு!

Anbumani Ramadas' insistence! Will the Tamil Nadu government cancel it?

Anbumani Ramadas' insistence! Will the Tamil Nadu government cancel it?

அன்புமணி ராமதாஸின் வலியுறுத்தல்! ரத்து செய்யுமா தமிழக அரசு!

தமிழ்நாட்டின் அரசு பணிகளுக்கு தமிழக அரசு பல்வகை நேர்முகத்தேர்வுகளை நடத்தி வருகிறது.இத்தேர்வுகள் நடத்தப்படும் போதெல்லாம் பல்வகை முறைக்கேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் நடந்த வண்ணமாகதான் உள்ளது.இதனை நேர்மையாக நடத்தும்படி பல தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.மற்றத்தலைவர்கள் போலவே அன்புமணி ராமதாஸ் தற்போது வலியுறுத்தியுள்ளார்.

அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,தற்போது கர்நாடக மாநிலத்தில் அனைத்து நேர்முகத்தேர்வுகளையும் ரத்து செய்து உள்ளது.இதனால் தகுதியானவர்களுக்கு அனைவருக்கும் அரசு பணி கிடைக்கும்.இது பெருமளவு வரவேற்குறியதாகும்.அம்மாநிலத்தில் உள்ளதை போலவே தற்போது தமிழ்நாட்டிலும் அச்செயல்முறை நடைமுறைபடுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

அந்தவகையில் தமிழகத்தில் நடக்கும் அரசு பணியாளர்களுக்கான  நேர்முகத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்து பணியமர்த்த வேண்டும்.அவ்வாறு நடைமுறைக்கு வரும் நிலையில் முறைக்கேடுகள் இன்றி அனைவருக்கும் அரசு வேலை வாய்ப்பை தர இயலும்.அதுமட்டுமின்றி லஞ்ச ஊழலையும் தடுக்க இயலும் என கூறியுள்ளார்.இவரது கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்குமா என்பது பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Exit mobile version