PMK-DMK:ராணிப்பேட்டை பொதுக்கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்தார் அன்புமணி ராமதாஸ்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று(நவம்பர் -7) பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மாநில துணைத் தலைவர் கே.எல் இளவழகன் உள்ளிடம் கட்சியின் தலைமை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் இக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், திமுக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
அதாவது, திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டு காலக்கட்டத்தில் ஆறாயிரம் கொலைகள் , ஐம்பதாயிரம் குற்றங்கள் நடைபெற்று இருக்கிறது . மேலும் இளைய தலைமுறை போதை பழக்கத்திற்கு அதிக அளவில் அடிமையாகி இருக்கிறது. அமெரிக்காவில் என்னென்ன போதை பொருட்கள் கிடைக்கிறதோ அவை அனைத்து தமிழகத்தில் கிடைக்கிறது.
இது போன்ற சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது திராவிட மாடல் அரசு என்றும், “செந்தில் பாலாஜி” போன்ற ஊழல் குற்றவாளிகளையும் இந்த அரசு கொண்டாடுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு 510 வாக்குறுதிகளை கொடுத்தார், அதில் பத்து சதவீத வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றி இருக்கிறது.
மேலும் மீதமுள்ள 90 சதவீத வாக்குறுதிகளை அவர்களே நிறைவேற்றி உள்ளதாக கூறிக் கொள்வார்கள் என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். திமுக அரசுதான் சாதி கலவரங்களை தூண்டுகிறது என்றார்.மேலும் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஆண்டுகாலத்தில் தமிழகத்தை டோக்கியோவை போல் மாற்றிக் காட்டுகிறோம்” என்றும் தமிழகத்தில் மதுவை முற்றிலும் ஒழித்து விடுவோம். என்று உறுதியளித்தார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.