போதைப்பொருட்கள் மற்றும் கூலிப்படையை அடியோடு ஒழிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

0
153
Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

போதைப்பொருட்கள் மற்றும் கூலிப்படையை அடியோடு ஒழிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட  போதை பொருட்களின் விற்பனை அதிகமாக இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போய் இருப்பதாகவும், கூலிப்படையை அடியோடு தமிழக அரசு ஒழிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தாம்பரம் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக அரங்கில் யோனக்ஸ் சன்ரைஸ் அகில இந்திய மாஸ்டர்ஸ் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது.

டால்பின் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் அமைப்பு, தமிழ்நாடு மாநில பேட்மிண்டன் சங்கம் மற்றும் அகில இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் ஆதரவோடு இந்த போட்டிகளை இணைந்து  நடத்தியது. இதில் 35 வயது முதல் 75 வயது வரையிலான வயதுப்பிரிவுகளில் 1000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய பேட்மிண்டன் சங்க துணைதலைவரும், தமிழக பேட்மிண்டன் சங்க தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சி தலைவருமான அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகளை  வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் அதிகமாக இருப்பதாகவும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும் , அதே நேரத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா பிடிப்பதை  சமூக  வலைதளங்களில்  பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும்தெரிவித்துள்ளார்.

மேலும் போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் மதுவை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும், கூலிப்படையை தமிழக அரசு அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.