Anbumani Ramadoss: தமிழக மின்வாரியம் அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்.
மத்திய அரசு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சார பயன்பாட்டை துல்லியமாக கணிக்கும் வகையில் கட்டாய ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடி மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் நன்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்து இருந்தது.
எனவே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பினை ஒப்பந்தத்தை அதானி குழும நிறுவனம் எனர்ஜி சொலுசன்ஸ் லிமிடெட் (Adani Energy Solutions Limited) குறைந்த புள்ளி ஏலத்தில் எடுத்தது. இதற்காக ஸ்மார்ட் மீட்டர் ஒன்றுக்கு மத்திய அரசு ரூ.900 மானியம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தது.
ஒரு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ.15,000 என்ற வகையில் 80 லட்சம் மீட்டர்களுக்கு தொகையை பெற்று இருக்கிறது. ஆனால் புதுவை மாநிலத்தில் ஒரு மீட்டருக்கான செலவாக ரூ.6169 நிர்ணயம் செய்து இருக்கிறது.இந்த திட்டம் அறிவித்து இரண்டு வருடங்கள் ஆகி உள்ள நிலையில் மேலும் ஸ்மார்ட் மீட்டருக்கு விலை குறைந்து இருக்கும்.
எனவே அன்புமணி ராமதாஸ் அதானி குழுமத்துடன் தமிழக அரசு செய்து இருக்கின்ற ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் என அறிவித்து இருக்கிறார். மேலும் தமிழக அரசே ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்தினால் என்ன? கேள்வி எழுப்பி இருக்கிறார்.