புதிய கல்வி கொள்கை கருத்தில் நடிகர் சூர்யாவை ஆதரிக்கும் அன்புமணி ராமதாஸ்

0
143

புதிய கல்வி கொள்கை கருத்தில் நடிகர் சூர்யாவை ஆதரிக்கும் அன்புமணி ராமதாஸ்

புதிய கல்வி கொள்கை கருத்து இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என நடிகர் சூர்யாவை சுட்டிக்காட்டி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 

பாமகவின் 31வது ஆண்டு விழாவை முன்னிட்டு தியாகராய நகரில் உள்ள பாமகவின் கட்சி அலுவலகத்தில் பாமக கொடியை அன்புமணி ராமதாஸ் ஏற்றி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமகவால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவே மாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மக்களுக்காக பாமக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அவர் அப்போது கூறினார். அஞ்சல் துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும் எனவும், தமிழை தவிர்த்துவிட்டு நடத்தப்பட்ட இந்த தேர்வு மீண்டும் நடத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.  

புதிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக ஆய்வு செய்ய பாமக குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும், அந்த குழுவின் அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம் அளிப்போம் எனவும் அவர் கூறினார். மேலும் நீட், எக்சிட் போன்ற தேர்வுகள் எல்லாம் தனியார் பயிற்சி மையம் உருவாகவே வழிவகுக்கும் என்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.