ராமதாஸை அங்கீகரிக்கவில்லை என்றாலும் கொச்சைப்படுத்தாதீர்கள்!! அன்புமணி ஆதங்கம்!!

0
110
Anbumani spoke about Dr. Ramadoss at the book release ceremony "Wars do not rest"

pmk: “போர்கள் ஓய்வதில்லை” புத்தக வெளியிட்டு விழாவில் மருத்துவர் ராமதாஸ் குறித்து பேசி இருக்கிறார் அன்புமணி.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் “போர்கள் ஓய்வதில்லை”  என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இந்த புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் புத்தகத்தை வேலூர் VIT பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் வெளியிட, தொழிலதிபர் வி.ஜி சந்தோஷம் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விழா மேடையில் பேசத் தொடங்கினார். அதில், தமிழகத்தை ஆறு மாதம் பாமகவிடம் ஒப்படைத்து பாருங்கள் நல்ல பல திட்டங்களை நிறைவேற்றும் . ஒரு சொட்டு மது தமிழகத்தில் இருக்காது.

டாஸ்மாக் கடைகளை முழுவதும் மூடிவிடுவோம். அதற்கான மாற்று வருவாயினை உருவாக்குவோம் என கூறினார். மேலும், அம்பேத்கர் காந்தியை போல தேசிய தலைவர். ஆனால் தலித் தலைவர் என்ற வட்டத்திற்குள் சுருக்கி இருக்கிறார்கள். அது போலவே தமிழகத்தில் ராமதாஸ் அவர்கள் சாதி வட்டத்திற்குள் சுருக்கி விட்டார்கள். தமிழகத்தில் எந்த சமுதாயத்திற்கு பிரச்சனை என்றாலும், முதலில் வந்து நிற்பவர் மருத்துவர்  ராமதாஸ் அவர்கள் தான்.

இன்றைக்கு வட தமிழகம் அமைதியாக இருக்க இவரே காரணம் 30 ஆண்டுகளுக்கு முன் இப்படி இல்லை, வன்முறை களமாக வட தமிழகம் இருந்தது. படித்தவர்களுக்கு நாங்கள் போராடி இட ஒதுக்கீடு வாங்கி தருகிறோம் அதற்காக போராட்டம் நடத்துவோம். இதை நீங்கள் அங்கீகரிக்க விலை என்றாலும் கொச்சைப்படுத்த வேண்டாம் என பேசி இருக்கிறார்.