நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அதிமுக கூறியது போல பாமக வில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. திரு அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பிறகு பேசிய அன்புமணி ராமதாஸ் திமுக கூட்டணியின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழகத்துக்கு பயன் இல்லை என்று பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்தார்.
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, திமுகவில் ”37 எம்.பிகள் இருக்கின்றனர். அந்த 37 எம்.பிகள் டெல்லியில் போய் என்ன செய்யப்போகிறார்கள்? என்று கேட்டார்.
மேலும் பேசிய அவர், இவர்கள் யாராவது போய் பிரதமரை சந்திக்க முடியுமா? பிரதமரிடம் ஏதாவது வேண்டுகோள் வைக்க முடியுமா? ஆனால் பிரதமர் மோடி என்னிடம் பேசினார். அவர் என்னிடத்தில் கேட்டது, தமிழ்நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் எனக் கேட்டார்.
நான் கூறினேன், பேரறிவாளன் உள்பட அந்த 7 பேர் இரட்டை ஆயுள் தண்டனைக்கு மேல் தண்டனை பெற்று விட்டார்கள் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழக மக்களின் எண்ணம் எனச் கூறினேன். பேரறிவாளன் எந்தத் தப்பும் செய்யாதவர். பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து விட்டது. தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. அவர்களை விடுதலை செய்யுங்கள் எனக் கூறினேன்.
அதை கேட்டு பிரதமர் மோடி விரைவில் நல்ல முடிவை அறிவிக்கிறேன் எனக் கூறினார் என அன்புமணி ராமதாஸ் வேலூர் பரப்புரையில் தெரிவித்தார்.
அதே நேரத்தில், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளை அழைத்துக் கொண்டு திரு அமித் ஷாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாம்பும் கீரியும் போல உள்ள பாமக, விசிக ஆகிய இரு கட்சிகளும் ஒரே விசியத்தை கையில் எடுத்து நாடாளுமன்றத்தை நோக்கி இருக்கிறது. இதில் யாருடைய வேண்டுகோளை பாஜக அரசு கேட்கும் என்பது தெரியவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி அரசுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. அது மட்டும் அல்லாமல் திரு அன்புமணி ராமதாஸ் மோடி அவர்களிடம் அதிக அளவில் நேரடியக தொடர்புடையவர். இதனால் பாமகவின் அன்புமணி ராமதாஸ் கோரிக்கையை ஏற்று நடத்தும் மோடி அரசு என சமூக ஆர்வலர் பலர் கூறுகின்றனர்.