Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆலோசனை கூறிய அன்புமணி…! ஏற்க மறுத்த முதல்வர் என்ன நடந்தது…!

இந்த ஆண்டு தமிழகம் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மடிக்கணினி மிதிவண்டி போன்றவற்றை நிறுத்தி வைப்பதற்கு தமிழக அரசு ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக வெளியாகி இருக்கின்ற செய்தி மாணவர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருக்கின்றார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட பல கல்வி நிறுவனங்களில் பயிலும் பதினொரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு இந்த ஆண்டு வாங்கப்பட வேண்டிய மிதிவண்டி மடிக்கணினி ஆகியவற்றை நினைப்பவர்கள் தமிழக அரசு யோசனை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன இந்த செய்தி மாணவர்களிடையே பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தும் அரசின் இந்த முடிவு எந்த வகையில் பார்த்தாலும் நியாயமானது அல்ல என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் 2011 12 ஆம் வருடத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அதோடு பொறியியல் கல்லூரிகளில் 2 மற்றும் 4 ஆம் வருடம் படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இப்போது இத்திட்டம் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் தொழில்நுட்ப கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகின்றது அதேபோல பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

கொரனோ தொற்று காரணமாக, மிதிவண்டிகள் மற்றும் மடிக்கணினிகள் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக அந்தத் திட்டங்களை இந்த ஆண்டு மட்டும் நிறுத்தி வைத்து அதில் அதற்காக வரும் நிதியை தடுப்பதற்காக பயன்படுத்தி கொள்ளலாம்.

என்று அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இது தேவையற்ற குழப்பங்கள் தான் ஏற்படும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார். தமிழக அரசு இவ்வாறு செய்வதால் மாணவர்களிடையே தேவையில்லாத பதற்றமும் கவலையும் தான் உண்டாகும் அது அவர்களின் கல்வி கற்கும் திறனை பாதிக்கும் வாய்ப்பு இருக்கின்றது.

இப்போது இருக்கிற திட்டப்படி பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மிதிவண்டி யும் மடிக் கணினியும் வழங்கப்பட்டால் அது அந்த மாணவர்களின் பள்ளிக் கல்வியும் கல்லூரிக் கல்வியை கற்பதற்கு உதவியாக இருக்கும்.

எங்களைப் பொறுத்தவரையில் பயனற்ற இலவசங்களை வழங்குவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை ஆனால் அதே நேரத்தில் கல்வியைப் பொறுத்தவரையில் பென்சில் முதல் மடிக்கணினி வரை அனைத்தையும் இலவசமாக வழங்கலாம் என்பது தான் எங்கள் கட்சியின் கொள்கையாக இருக்கின்றது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் நிழல் நிதிநிலை அறிக்கைகள் கல்வி தொடர்பான ஆவணங்களில் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கும். ஆன்லைன் மூலமாக கல்வி கற்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நேரத்தில் மடிக்கணினி வழங்கப்பட்டால் அது அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

Exit mobile version