Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதிலேயே குழந்தை பிறந்ததா? சர்ச்சையை கிளப்பிய வாலிபர்!

andhra guy claims to be aishwarya rai son

andhra guy claims to be aishwarya rai son

ஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதிலேயே குழந்தை பிறந்ததா? சர்ச்சையை கிளப்பிய வாலிபர்!

நடிகைகள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது அந்த வகையில் உலக அழகி என்ற பட்டம் பெற்ற நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு எதிராகவும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. ஐஸ்வர்யா ராய் ஹிந்தி, தமிழ், பெங்காலி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் மற்றும் தாயார் பிருந்தா ஆகும்.

தமிழில் மணிரத்தினம் இயக்கிய இருவர் என்ற படத்தின் மூலமாக தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். உலக அழகி என்பதால் இவருடைய அழகிற்கும்,நடிப்பிற்கும் நிறைய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. திரைத்துறையில் கலக்கி கொண்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் மங்கல் ஊரை சேர்ந்த 31 வயது நிரம்பிய வாலிபரான சங்கீத்ராய் குமார் என்பவர் தான் ஐஸ்வர்யா ராய்க்கு எதிராக சர்ச்சையை கிளைப்பியுள்ளார். 31 வயதாகும் இந்த சங்கீத்ராய் குமார் கடந்த ஆண்டே நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு எதிராக அவர் தான் தன்னை பெற்றெடுத்த தாய் என்று சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பது, நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் செயற்கை கருத்தரித்தல் மூலமாக லண்டனில் 1988 ஆம் ஆண்டு என்னை பெற்றெடுத்தார். ஐஸ்வர்யா ராய் என்னை பெற்றெடுக்கும் போது அவருக்கு 15 வயது தான் ஆனது. 

பின்னர் எனது அம்மா ஐஸ்வர்யா ராய்க்கு 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனுடன் திருமணம் ஆனது. ஆனாலும், அவர் தற்போது தனியாக தான் வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் என்னுடன் வசிக்க வேண்டும். என் அம்மாவை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன். என் அம்மாவின் செல்போன் நம்பரையாவது எனக்கு தாருங்கள். எனக்கு என் அம்மா வேண்டும் என்றும் அந்த வாலிபர் கூறியிருக்கிறார். ஆனால், அந்த வாலிபர் சங்கீத்ராய் குமாருக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் தான் அவரது அம்மா என்று உறுதியாக நிரூபிக்க எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த வாலிபர் மீண்டும் தற்போது ஒரு புயலை கிளப்பியுள்ளார். இது குறித்து அந்த வாலிபர் மீண்டும் சமீபத்தில் பேட்டி அளித்திருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, இரண்டு வயது வரை என்னை என் பாட்டி பிருந்தா மற்றும் தாத்தா கிருஷ்ணராஜ் ஆகியோர் தான் பார்த்துக் கொண்டார். பின்னர் என் தந்தை வடிவேலு ரெட்டி விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்று விட்டார். நான் அங்கு தான் வளர்ந்தேன். அந்த நேரத்தில் எனது உறவினர்கள் என்னுடைய பிறப்பு சான்றிதழ்களை எல்லாமே அழித்து விட்டார்கள். தற்போது நான் மும்பையில் என் அம்மா ஐஸ்வர்யாராயுடன் வசிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

சங்கீத்ராய் குமார் சமீபத்தில் கொடுத்த அந்த பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் என்னுடைய அம்மா என்று உறுதியாக கூறியிருக்கிறார். இந்த தகவலானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த சர்ச்சையான கருத்து குறித்து சம்பந்தப்பட்ட ஐஸ்வர்யாராயும், அபிஷேக் பச்சனும் ஏன் இன்னும் எந்தவிளக்கமும் கொடுக்கவில்லை என்று பலர் சந்தேக கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

Exit mobile version