Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிசாசு 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் … ஆண்ட்ரியா வெளியிட்ட வைரல் வீடியோ

பிசாசு 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் … ஆண்ட்ரியா வெளியிட்ட வைரல் வீடியோ

ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா பன்முகத்திறமைக் கொண்டவர். ஒரு பாடகியாக இருந்து பின் திரை உலகில் கால்பதித்து, ஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகையாக வலம் வந்தார். பின்னணிப் பாடகியாக இருந்த ஆண்ட்ரியாவை தன்னுடைய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகம் செய்துவைத்தார் கௌதம் மேனன்.பிறகு ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

மிஷ்கின் இயக்கிய 2016 ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் தேய்வழக்கு பேய் படங்களுக்கு மத்தியில் வித்தியாசமான திரைப்படம் என பெயர் பெற்றது. அதில் அவர் பேயை தேவதைபோல் காண்பித்து இருப்பார். அந்த படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது பிசாசு 2 இயக்கி வருகிறார் மிஸ்கின். அதில் ஆண்ட்ரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பூர்ணா  மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்த மிஸ்கின் இந்தப் படத்தில் ஆண்ட்ரியாவை மிகவும் கொடுமை செய்து விட்டேன் என்று அவர் கூறியிருந்தார். சுமார் 10 நிமிடம் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றன. இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்துக்கு இரு மொழிகளிலும் ஆண்ட்ரியா டப்பிங் பேசியுள்ளார்.  முதல் முறையாக ஆண்ட்ரியா தெலுங்கில் டப்பிங் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் டப்பிங் பேசும் வீடியோவை ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Exit mobile version