தமிழில் பச்சைகிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஆண்ட்ரியா ஜெர்மையா. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இந்த திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் ஜோதிகா நடித்திருந்தனர்.
ஆண்ட்ரியா நடிகை மட்டுமல்லாமல் பாடகியும், பின்னணி குரல் கொடுப்பவரும் ஆவார். நிறைய ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் என்னும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் இந்த திரைப்படத்தில் பாடல்களும் பாடியுள்ளார்.
அதன் பிறகு விஸ்வரூபம், உத்தம வில்லன், அரண்மனை, தரமணி, அவள், தளபதி விஜய்யின் மாஸ்டர் போன்ற வெற்றி படங்களில் நடித்தார்.
நடிப்புடன் சேர்த்து பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.
மேலும் திரிஷா, எமி ஜாக்சன், இலியானா போன்ற டாப் நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, அமீர் நடித்த வட சென்னை திரைப்படத்தில் ஆண்ட்ரியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராஜனாக நடித்த அமீரின் மனைவியாக வரும் இவர் கதையின் முக்கிய திருப்புமுனையாக இருப்பார்.
இந்த திரைப்படத்தில் படகில் வரும் காட்சி ஒன்றில் இவர் டாப் லெஸ்ஸாக நடித்திருப்பார்.
ஆண்ட்ரியா பல துணிச்சலான கதாபாத்திரங்களை இன்றளவும் ஏற்று நடித்து வருகிறார்.
ஆண்ட்ரியாவின் இன்றைய இன்ஸ்டாக்ராம் போஸ்ட்: