இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு தற்சமயம் இந்து பண்டிகைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்ற கருத்து தமிழகம் முழுவதும் பரவலாக எழுந்து வருகின்றது.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லாமல் இருப்பதை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர் வாழ்த்து சொல்ல வில்லை என்றால் பண்டிகையை முழுமை அடையாது என்று ஒரு சிலர் நினைத்துக் கொண்டிருப்பது அவர்களுடைய அறியாமையை தான் காட்டிக் கொண்டு உள்ளது. நம்முடைய பாரம்பரியமான பண்டிகைகள் அனைத்தும் அரசியலைக் கடந்து தனி சிறப்பும் உக்கடை என்று சொல்லப்படுகிறது. அதேபோல அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவை ஆகும். நம்முடைய இந்துமத பண்டிகைகள் வெறும் சடங்குகள் கிடையாது.
அந்த சடங்குகளில் விஞ்ஞானமும், மருத்துவமும், உளவியலும், மறைந்து இருக்கின்றது. கொண்டாடு வோருக்கு மனநிறைவையும், எதிர்காலத்தை திட்டமிடுவதில் சவால்களைச் சந்திப்பதற்கும் தேவைப்படும் மன உறுதியையும், செயலில் புதிய வேகத்தையும், கொடுப்பதாகும். நம்முடைய பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு சில குறைந்தபட்ச தகுதிகள் தேவைப்படுகிறது.
இந்துமத தர்மத்தை புரிந்து கொண்ட நம்முடைய அறிவு கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை நாகரீகம், மாண்பு, இவற்றையெல்லாம் அவர் கொண்டிருக்கவேண்டும் அனைத்து மனிதர்களையும், சமமாக நினைக்கும் மனநிலை இருக்க வேண்டும் இது எதுவும் இல்லாதவரிடம் வாழ்த்துப் பெறுவது நமக்கு அவமானம் என்று கருதப்படுகிறது. தகுதி இல்லாதவர் இன் வார்த்தை எதிர்பார்த்துக் காத்திருப்பது முட்டாள்தனம் என்று சொல்லப்படுகிறது.
ஒருவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமென்றால் மாற்ற ஒருவரின் இதயத்தில் இருந்து வெளிவர வேண்டும். அதை கட்டாயப்படுத்தி பெற நினைப்பது நல்லதல்ல. நல்லவர் வாழ்த்தும்போது புண்ணியம் கிடைக்கும், தீயவர் வரும்போது அது பாவத்தை கொடுக்கும்,. இந்து தர்மத்தை அழிக்க நினைப்பவர்கள் நட்பை பாராட்டுபவர் ஒன்று அறியாமையில் இருப்பார், இல்லையென்றால் பணத்திற்காக எதையும், செய்யத் துணிந்தவர் ஆக இருப்பார் எனத் தெரிவிக்கிறார்கள்.
ஆட்சியை கைப்பற்றி விட்ட காரணத்தினால், நம்முடைய பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் தகுதியை ஒருவர் அடைந்து விட இயலாது. அறிவுடையோருக்கு ஆண்டியும் அரசனும் ஒன்றுதான் ஒரு மனிதனின் தகுதி என்பது அவருடைய குணத்தை பொறுத்து தான் இருக்குமே தவிர பதவியை பொறுத்தது இல்லை என தெரிவிக்கிறார்கள்.