Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரத்த சோகை அறிகுறிகள் மற்றும் காரணங்கள்!! இதை குணப்படுத்தும் அற்புத மருந்துகள்!!

நம் நாட்டில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானோர் இருக்கின்றனர்.இந்த இரத்த சோகை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமையே இதன் பாதிப்பு அதிகரிக்க காரணமாகும்.

இரத்த சோகையை சாதாரண பாதிப்பாக எண்ணி அலட்சியம் செய்தால் உயிருக்கு ஆபத்தான நிலையை சந்திக்க நேரிடும்.இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது.இந்த ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க நிச்சயம் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம் தேவைப்படுகிறது.

இரத்த சோகை வர வாய்ப்பிருப்பவர்கள் யார்?

**கருத்தரித்த பெண்களுக்கு இரத்த சோகை வரக் கூடும்.

**மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு இருப்பவர்களுக்கு இரத்த சோகை வரலாம்.

**வயிற்றுப்புண்,பைல்ஸ்,சிறுநீரகம் சம்மந்தபட்ட பிரச்சனைகளை அனுபவித்து வருபவர்களுக்கு இரத்த சோகை பாதிப்பு வரலாம்.

**இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் ஹார்மோன்களின் எண்ணிக்கை குறைந்தால் இரத்த சோகை ஏற்படும்.

**பாலூட்டும் தாய்மார்களுக்கு இரத்த சோகை வர அதிக வாய்ப்பிருக்கிறது.இரும்புச்சத்து குறைபாடு இருக்கும் பெண்களுக்கு இரத்த சோகை வரும்.

இரத்த சோகை அறிகுறிகள்:

1)அதீத உடல் சோர்வு
2)தலைசுற்றல்
3)அதிக உடல் வலி
4)தலைவலி
5)கவனக் குறைவு
6)மயக்க உணர்வு

இரத்த சோகை குணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்:

1.இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ள.வேண்டும் பேரிச்சை,முருங்கை போன்றவற்றில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது.

2.வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் வைட்டமின் பி9 உணவுகள் இரத்த சோகை பாதிப்பை குணப்படுத்தும்.

3.மீன் உணவுகள்,பச்சை காய்கறிகள்,வேகவைத்த முட்டை,கோழி இறைச்சி,பீன்ஸ் போன்ற உணவுகள் இரத்த சோகையை குணப்படுத்துகிறது.

4.பழங்கள்,பருப்பு,உலர் விதைகள்,போலிக் அமிலம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குணமாகும்.

Exit mobile version