Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அனிருத்தின் தாத்தா எஸ் வி ரமணன் மரணம்… திரையுலகினர் அஞ்சலி!

அனிருத்தின் தாத்தா எஸ் வி ரமணன் மரணம்… திரையுலகினர் அஞ்சலி!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் அனிருத்தின் தாத்தா எஸ் வி ரமணன் காலமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட குடும்பம் அனிருத்துடையது. அவரின் முன்னோர்கள் பலர் சினிமாவில் பிரபலமானவர்களாக விளங்கியுள்ளனர். தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் ஆளுமையாக விளங்கிய இயக்குனரும் தயாரிப்பாளருமான கே சுப்ரமண்யம் அவர்களின் மகனும் தற்போது முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் அனிருத்தின் அம்மா வழி தாத்தாவுமான எஸ் வி ரமணன் முதுமை காரணமாக காலமாகியுள்ளார்.

எஸ் வி ரமணன் உருவங்கள் மாறலாம் உள்ளிடட் சில படங்களை  படங்களை இயக்கியும், இசையமைத்தும் உள்ளார். அதுபோல பல ரேடியோ நாடகங்களில் நடித்தும் உள்ளார். அவரது மரணத்துக்கு திரையுலகினரும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரின் இறுதி நிகழ்ச்சிகள் இன்று மாலை ஆர் ஏ புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடக்க உள்ளது.

Exit mobile version