Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மேடையில் பாட்டு பாடிய அனிருத்..கையில் கிடைத்த பொருட்களை எடுத்து வீசிய ரசிகர்கள்..!!

Anirudh sang on the stage.

Anirudh sang on the stage.

மேடையில் பாட்டு பாடிய அனிருத்..கையில் கிடைத்த பொருட்களை எடுத்து வீசிய ரசிகர்கள்..!!

தனுஷ் நடிப்பில் வெளியான 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் அனிருத். அந்த படத்தில் இடம்பெற்ற வொய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமாக அன்றில் இருந்து அனிருத் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறிவிட்டார். 

அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுக்கு இசையமைத்து உச்சம் தொட்ட அனிருத் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்திற்கு பிறகு வேற லெவலுக்கு சென்று விட்டார். தற்போது தமிழ் மட்டுமல்ல ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் அனிருத் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். 

அந்தவகையில் வேட்டையன், இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் தேவரா ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ஓர் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது அனிருத் படங்களுக்கு இசையமைப்பது தவிர வெளிநாடுகளுக்கு சென்று மியூசிக் கான்செர்ட் நடத்துவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

 அதன்படி சமீபத்தில் வெளிநாடு ஒன்றில் அனிருத் நடத்திய மியூசிக் கான்செர்ட்டில் அவர் மேடையில் பாடி கொண்டிருக்கும்போது கீழே இருந்து ரசிகர்கள் கையில் கிடைத்த பொருட்களை தூக்கி அடித்துள்ளனர். இருப்பினும் அனிருத் அந்த சூழலை மிகவும் பொறுமையாக கையாண்டுள்ளார்.

 உண்மையில் அனிருத் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், நிச்சயம் டென்ஷனாகி இருப்பார்கள். ஆனால் அனிருத் மிகவும் கூலாக பாடிக்கொண்டே தன்னை நோக்கி வந்த பொருட்களை கையில் பிடித்தும், கீழே விழுந்த பொருட்களை அப்புறப்படுத்தியும் இருந்துள்ளார். அவரின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Exit mobile version