இரத்த அழுத்தத்தை முறைப்படுத்தும் சோம்பு பானம்!! டெயிலி மார்னிங் ஒரு கிளாஸ் குடித்தால் 14 நாளில் பலன் கிடைக்கும்!!

0
129

ஹைப்பர் டென்ஷன் என்று அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.இரத்த அழுத்தம் பொதுவாக இருக்க வேண்டிய அளவை தாண்டும் பொழுது உயர் அழுத்தமாக மாறுகிறது.நீண்ட காலம் இரத்த அழுத்தப் பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட வாயிருக்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தில் முதன்மை உயர் அழுத்தம்,இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் என்று இருவகை இருக்கின்றது.கடும் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையை சந்தித்து வருபவர்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முக்கியமான ஒரு விஷயமாகும்.இதற்கு சிறந்த தீர்வாக பெருஞ்சீரகம் உள்ளது.மசாலாப் பொருட்களில் ஒன்றான பெருஞ்சீரகம்(சோம்பு) அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த பொருளாகும்.

பெருஞ்சீரகத்தில் உள்ள பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.அது மட்டுமின்றி பெருஞ்சீரக நீரை தொடர்ந்து பருகி வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

தயாரிக்கும் முறை:-

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் பெருஞ்சீரகத்தை கொட்டி வாசனை வரும் வரை வறுத்து இறக்க வேண்டும்.

பின்னர் பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.அடுத்து வறுத்து வைத்துள்ள பெருஞ்சீரகத்தை அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் நிறம் மாறி பெருஞ்சீரக வாசனை தண்ணீரில் இறங்கும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

பின்னர் பாத்திரத்தின் மீது தட்டு வைத்து மூடி 10 நிமிடங்கள் வரை ஆறவிட வேண்டும்.பின்னர் இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டிய பிறகு ஒரு தேக்கரண்டி தூயத் தேனை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இந்த பெருஞ்சீரக பானத்தை தினமும் பருகி வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.