Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அன்றாடம் சமையலுக்கு பயன்படும் சோம்பு!!! இதில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கின்றதா!!!?

#image_title

அன்றாடம் சமையலுக்கு பயன்படும் சோம்பு!!! இதில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கின்றதா!!!?

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சோம்பில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நமது வீட்டில் தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சோம்பில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சோம்பில் கால்சியம், பொட்டாசியம், தாமிரம், மக்னீசியம், செலினியம், துத்தநாகம் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது.

மேலும் சோம்பில் இரும்புச்சத்து, விட்டனமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி, விட்டமின் ஈ போன்ற சத்துக்கள் உள்ளது. மேலும் விட்டமின் குழுக்களான தயாமின், நியாசின், ரிபோபிளேவின், பைரோடக்சின் போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த சிறிய சோம்பில் இவ்வளவு சத்துக்கள் இருக்கும் நிலையில் இதைவிட உடலுக்கு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. அது என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சோம்பில் உள்ள மருத்துவ குணங்கள்…

* சோம்பு நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகிறது. இதனால் உடல் எடை குறைகின்றது.

* சோம்பை நாம் ஈரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த மருந்தாக பயன்படுத்தலாம்.

* சோம்பு தண்ணீர் குடித்து வந்தால் உடலில் வளர்ச்சிதை மாற்றங்கள் சரியாகி விடும்.

* தொப்பை உள்ளவர்கள் சோம்பை உணவில் சேர்த்துக் கொண்டால் தொப்பை கரைந்து சரியான உடல் அமைப்பை பெறலாம்.

* சோம்பை தொடர்ந்து சேர்த்து வந்தால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது.

* நாம் தினமும் சோம்பு எடுத்து வந்தால் நமது மூளை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

* தூக்கமில்லாமல் அவதிப்படும் அனைவரும் சோம்பை உணவில் சேர்த்து வந்தால் நல்ல அமைதியான நிம்மதியான தூக்கம் ஏற்படும்.

* பெண்கள் மாதவிடாய் காலங்களில் சோம்பு தண்ணீர் குடித்தால் அவர்களுக்கு ஏற்படும் வயிற்று வலி குறையும்.

 

Exit mobile version