Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்

Anitha Radhakrishnan

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்த்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியலியல் மிக முக்கிய பிரமுகர்களில் ஒருவர் அனிதா ராதாகிருஷ்ணன். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர்.

அ.தி.மு .க , தி.மு.க என தனது அரசியல் களம் கண்டவர்.

தற்போது தமிழக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

அமைச்சரவையில் பதவி வகித்து வரும் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் அனைத்தும் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு தொடரப்பட்ட பணமோசடி வழக்கு நடவடிக்கையில் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை முடக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

Exit mobile version