Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல இயக்குனரின் படத்தில் அஞ்சலி கதாநாயகியா? இந்தி நடிகையை ஓரம்கட்டும் தமிழ் நடிகை!

Anjali acting in a famous director film

Anjali acting in a famous director film

பிரபல இயக்குனரின் படத்தில் அஞ்சலி கதாநாயகியா? இந்தி நடிகையை ஓரம்கட்டும் தமிழ் நடிகை!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரும் பிரம்மாண்டதிற்கு பெயர் போனவருமான இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்.ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் தயாரிப்புப் பிரச்சனைகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அதனால் தனது அடுத்த திரைப்படத்தை ஆரம்பிக்க முடிவு செய்தார் இயக்குனர் ஷங்கர்.

இவரின் அடுத்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிகராகவும் கியரா அத்வானி நடிகையாகவும் தேர்வு ஆகியுள்ளனர்.மேலும் இந்த திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார்.தெலுங்கில் பிரபலமான தயாரிப்பாளர் இவர்.இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

இந்த படத்தின் இன்னொரு முக்கிய அறிவிப்பும் வெளியாக உள்ளது.அது என்னவென்றால் படத்தின் இன்னொரு கதாநாயகியாக நடிகை அஞ்சலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்கப்படுகிறது.இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகை அஞ்சலி நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

நடிகை அஞ்சலி இதற்கு முன்னர் பல வெற்றிப் படங்களில் நடித்து பெருமை பெற்றவர்.கற்றது தமிழ்,அங்காடி தெரு,எங்கேயும் எப்போதும்,இறைவி போன்ற திரைப்படங்களில் தனது நடிப்புத்திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் நடிகை அஞ்சலி.இவரின் சத்தமான குரல் இவருக்கு பல திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது.இயக்குனர் ஷங்கர் தனது முந்தைய திரைப்படங்களில் கதாநாயகிகளை சரியாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருப்பார்.இந்த படத்திலும் முதலில் கதாநாயகியாக இந்தி நடிகை கியரா அத்வானியை தேர்வு செய்து விட்டு மற்றொரு கதாநாயகியாக அஞ்சலியை தேர்வு செய்துள்ளார்.ஆனால் இதில் முதல் கதாநாயகி யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.விரைவில் இது குறித்தான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.

Exit mobile version