7 கை மாறினாலும் 70 கை மாறினாலும் திருட்டு பொருள் திருட்டுப்பொருள் தான்! திமுகவை கதறவிடும் தலித் தலைவர்

0
171

7 கை மாறினாலும் 70 கை மாறினாலும் திருட்டு பொருள் திருட்டுப்பொருள் தான்! திமுகவை கதறவிடும் தலித் தலைவர்

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா என்ற பிரச்சினை மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக பஞ்சமி நிலம் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் ட்விட்டரில் ஒரு போரே நடந்தது.

அசுரன் படத்தை பார்த்துவிட்டு இது படம் அல்ல பாடம் என்ற பதிவை டிவிட் செய்ததால் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடுமையான எதிர்வினைகளை சந்தித்து வருகிறார். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் தான் கட்டப்பட்டது என்று அதிரடியாக தெரிவித்தார் ராமதாஸ். இதற்கு பதிலாக 1985 ஆம் ஆண்டு பதியப்பட்ட பட்டவை வெளியிட்டு இது தனிநபர் பட்டாவாக பதியப்பட்டது என்று காட்டி ராமதாஸுக்கு பதிலளித்தார். இது மிகப்பெரிய பிரச்சினையாகவே திரும்பி மு.க.ஸ்டாலின் அவர்கள் மூலப்பத்திரத்தை காட்டாமல் யாரிடமிருந்து இடம் வாங்கப்பட்டது என்று தெரிவிக்காமல் ஏதோ ஒரு பட்டவை காட்டிவிட்டு சவால் விடுகிறார் என்று எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றனர்.

குறிப்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா அவர்கள் அப்பாவி மக்களின் நிலத்தை பிடுங்குகின்ற படுபாதக கட்சி என்று திமுக என்று கடுமையாக விமர்சித்தார்,. பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் அவர்களும் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் தான் கட்டப்பட்டது என்றும் இதற்கான ஆதாரத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவே வெளியிட்டார் என்று பேசினார். இடத்தை தலித் மக்களிடம் ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கும் என்று அதிரடியாக தெரிவித்தார்.

இதற்கு ஒரு படி மேல் போய் பாஜக தமிழக பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளது என்ற மக்களால் பேசப்படுகிறது இதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்தார். இதனை பரிசீலித்த தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம் முரசொலி அலுவலகம் இருந்த இடம் பஞ்சமி நிலமா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி தமிழக தலைமை செயலாளருக்கு அறிவிக்கை அனுப்பி உள்ளது. இதனால் திமுக கடும் அதிர்ச்சியில் உள்ளது. மு.க.ஸ்டாலின் அவர்களும் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் அவர்களும் பாமக நிறுவனர் ராமதாஸ் சொன்ன கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார், பஞ்சமி நிலத்தில் தான் முரசொலி மாறன் அலுவலகம் கட்டப்பட்டது என்றும் இதில் உண்மை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். ஏழு கை மாறினாலும் எழுபது கை மாறினாலும் திருட்டுப் பொருள் திருட்டுப் பொருள் தான் திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பேசினார், இப்படி அடுத்தடுத்து தாக்குதலால் திமுக தலைமை என்ன அறிக்கை வெளியிட போகிறது என்று திமுகவினரே எதிர்பார்க்கும் அளவில் நிகழ்வுகள் நடைபெறுகிறது.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும் முரசொலி மாறன் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்றால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் 29ம் தேதிக்குள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் திமுகவிற்கு கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.