Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்ட அண்ணா சுரங்கப்பாதை.. சென்னை மக்கள் வரவேற்பு!!

பழைய அண்ணா சுரங்கப்பாதை புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டதற்கு சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு அருகே இருக்கும் அண்ணா சுரங்கப்பாதை சென்னையில் உள்ள மிகப்பெரிய சுரங்கப்பாதைகளுள் ஒன்றாகும். இந்த சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டிற்கு உபயோகப்படாத அளவிற்கு மோசமான நிலையில் இருந்தது. இந்நிலையில், அந்த சுரங்கப்பாதை தற்போது புதுபிக்கப்பட்டு, அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலைய பொதுத் தளத்திற்கு செல்லும் சுரங்கப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள வாலஜா சாலை, எல்லிஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் அண்ணா சாலை ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் பயன்படுத்தும் வகையில் சுரங்கப்பாதை புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்துவதன் மூலம் சாலையை எளிதில் கடப்பதோடு காதிபவன் மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனைகளையும் இணைக்கிறது.

மேலும், சுரங்கப்பாதையில் இருந்து வெளியேறும் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களுக்கு பயன்படும் வகையில் சீரமைக்கப்பட்டிருக்கும் இந்த சுரங்கப்பாதை சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version