சென்னையில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதாவை ,இன்று நடக்கும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.சட்டப்பேரவை கடைசி நாளான இன்று சட்டபேரவை கூட்டம் இன்று காலையில் தொடங்கியது.இதில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சட்டப்பேரவையில் தாக்கல் தாக்கல் செய்துள்ளார்.
மேலும் ,அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் பிரிக்கப்படுவதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகிக்கும் என்றும், அண்ணா தொழில்நுட்பம் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் தனியாக இயங்கும் என தெரிவித்துள்ளார்.