சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது இந்த தேர்தலில் முதல் முறையாக முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றார்.அவர் வெற்றி பெற்றவுடன் அவருக்கு அமைச்சரவையில் முக்கிய இலாகாவின் மந்திரியாக பொறுப்பு கொடுக்கப்படலாம் என்று தமிழகம் முழுவதும் பேச்சுக்கள் இருந்தது ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே அதனை செய்யவில்லை மாறாக அவர் வெறும் சட்டசபை உறுப்பினராக மட்டுமே தான் இருந்து வருகிறார்.
காரணம் திமுக வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது என்று ஒரு குற்றச்சாட்டு திமுக மீது தமிழகம் முழுவதும் வைக்கப்படுகிறது அப்படி தமிழகம் முழுவதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலும் அதையும் தாண்டி தன்னுடைய மகனான உதயநிதி ஸ்டாலினை சட்டசபை உறுப்பினர் ஆக்கி அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.அத்தோடு ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்றே சுமார் ஒரு வருட காலம் கழித்து தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் எனவும், அப்போது உதயநிதிக்கு ஒரு முக்கிய இலாகா ஒதுக்கப்படும் என்றும் பேச்சுகள் அடிபட்டன.
இந்த நிலையில், இன்றைய தினம் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் ஆகும் ஆகவே இன்றைய தினம் நீட் தேர்வு தொடர்பான விவகாரம் குறித்து அதிமுக மற்றும் திமுக இடையே காரசாரமான விவாதம் நடந்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.நீட் தேர்விற்கு நிரந்தரமான விலக்கை பெறும் புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த சட்ட முன் வடிவை சட்டசபையில் தாக்கல் செய்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
இதற்கு இடையில் சட்டப்பேரவை வளாகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசு பள்ளிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்.. சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற இருக்கின்ற சூழ்நிலையில், பல முக்கிய அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றது.
இந்த சூழ்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்து சபாநாயகர் அப்பாவு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்.அலுவல் சாரா உறுப்பினராக மூன்று வருடங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு இருப்பதாக சபாநாயகர் அந்த அறிவிப்பில் தெரிவித்து உள்ளார் அதோடு கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகங்களுக்கும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களை சபாநாயகர் அறிவித்தார்.