BJP TVK: நேற்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பழனியில் காவடி எடுத்து சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, தவெக விஜய் பிரசாந்த் கிஷோருடன் நடத்திய ஆலோசனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஏசி ரூமில் ஒவ்வொரு அரசியல் வியூகர்களை உட்கார வைத்து பேசுவதால் மக்கள் பிரச்சனை தெரியாது. நேரடியாக களத்தில் இறங்கி மக்களை சந்திக்க வேண்டும். அப்படி சந்தித்தால் தான் அவர்கள் பிரச்சனை என்ன என்பது சொல்வார்கள்.
அந்த வகையில் நாங்கள் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து வருகிறோம். அதேபோல வியூகர்கள் அடிப்படையில் சொல்வதெல்லாம் அரசியலாகுமா? அதைத் தாண்டி மக்கள் தான் வியூக நிபுணர்கள் அவர்கள் சொல்வதுதான் அரசியலின் நிலை நிலவரம் என்ற பாணியில் விஜய்க்கு அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் மக்களை சந்திக்காமல் பெருமிதம் மிக்க வியூக நிபுணர்களை சந்திப்பதனால் ஒருபோதும் அரசியலில் வெற்றி பெற முடியாது. அதேபோல ஒவ்வொரு அரசியல்வாதியும் பொலிட்டிக்கல் கன்சல்ட்டன்ட்டை வைத்து அரசியலில் என்ன செய்து விட முடியும் என்று கேள்வியை முன் வைத்துள்ளார்.
முன்னதாகவே பிரசாந்த் கிஷோர் தமிழக அரசியல் களம் குறித்து தவெக- விற்கு அறிக்கை ஒன்றை கொடுத்திருப்பதாகவும், அதில் சட்டமன்ற தேர்தலில் 15 முதல் 20 சதவீத வாக்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளாராம். மேலும் நீங்கள் மக்களுடன் இணைய யாத்திரை போன்று மேற்கொள்வது அரசியல் நகர்வை அடுத்து கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என்று அறிவுறுத்தியுள்ளாராம். அதே அறிவுரையை தான் அண்ணாமலையும் விஜய்க்கு கூறியுள்ளார்.
என்னைப் போல் என் மனம் என் மக்கள் என்று யாத்திரை செல்லுங்கள் காவடி எடுங்கள் தெருவில் கூட நில்லுங்கள். மக்களை நேரடியாக முதலில் சந்தியுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார். அண்ணாமலையின் கருத்து குறித்து தற்பொழுது வரை விஜய் சார்பாக எந்த ஒரு எதிர் கருத்தும் தெரிவிக்கவில்லை.