அண்ணாமலை அண்ணன் கலைஞர் மாதிரி..அவ்வளவு அறிவு.. புகழ்ந்து தள்ளிய நடிகை ஆர்த்தி..!!

0
530
Annamalai Annan is like an artist.. so much knowledge.. actress Aarti who praised..!!

அண்ணாமலை அண்ணன் கலைஞர் மாதிரி..அவ்வளவு அறிவு.. புகழ்ந்து தள்ளிய நடிகை ஆர்த்தி..!!

பிரபல காமெடி நடிகை ஆர்த்தி சமீபத்தில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணைந்தார். இவரின் கணவர் கணேஷ் ஏற்கனவே பாஜக கட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை ஆர்த்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து தள்ளியுள்ளார். 

அதன்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஆர்த்தி, “நான் பாஜகவில் இணைய காரணமே அண்ணாமலை அண்ணன் தான். கலைஞர் ஐயா செய்தியாளர் சந்திப்பில் யார் என்ன கேள்வி கேட்டாலும், பதில் சொல்லுவாரு. அவரை மாதிரி தான் அண்ணாமலை அண்ணனும். யாரி என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுவாரு அவ்வளவு அறிவு. 

ஆனால் ஸ்டாலின் அண்ணனுக்கும், உதயநிதி தம்பிக்கும் இந்த திறமை இல்லை. ஒருவேளை கலைஞர் ஐயா உயிரோடு இந்திருந்தால் அவரோட அடுத்த அரசியல் வாரிசா அண்ணாமலை அண்ணன தான் அறிவிச்சிருப்பாரு. அண்ணாமலை அண்ணன் கண்ணாடி மாதிரி. நீங்க எந்த மொழியில பேசுறீங்களோ அந்த மொழியில பதில் சொல்லுவாரு. அவரு ஒரு அரசியல் சாணக்யன்.

பொதுவா அரசியல் தலைவர்கள் டென்ஷனா இருப்பாங்க. அதனால பேசும்போது ஏதாவது வாய்தவறி பேசுவது இயல்பு தான். ஆனாலும் அண்ணாமலை தப்பா எதுவும் பேசுனா மாதிரி எனக்கு தெரியல. திமுக தான் வேணும்னே அவரை டிரோல் பண்றாங்க. அதுவே முதல்வர் ஸ்டாலினை பாருங்க. அவரு படிக்கும்போதே தப்பா தான் படிப்பாரு. அண்ணாமலை அண்ணன் என்ன அப்படியா செய்றாரு?” என அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.