Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அண்ணாமலை ஆடியோ! பிடிஆர் மறுப்பு !

#image_title

அண்ணாமலை ஆடியோ! பிடிஆர் மறுப்பு .
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் ஊழல் செய்து 30,000 கோடி ரூபாயை சேர்த்து வைத்துள்ளதாக பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் சூடு தனிவதற்குள், நேற்று மீண்டும் பிடிஆரின் இரண்டாவது ஆடியோ என மற்றொன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுபற்றி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில், திமுக தொடங்கியதில் இருந்து ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையாக இயங்கி வருகிறோம்.
சமூக வலைத்தளத்தில் தற்போது பரவி வரும் ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது இல்லை. ஆடியோ ஜோடிக்கப்பட்டது. நவீன தொழில் நுட்பத்தை மலிவான யுக்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். எண்ணங்களை நிறைவேற்ற துடிக்கும் பிளாக் மெயில் கும்பலின் இதுபோன்ற கோழைத்தனமாக முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.
முதலமைச்சரிடம் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். இப்படிப்பட்ட ஆற்றல்மிகு செயல் வீரரான அமைச்சர் உதயநிதி குறித்து நான் எப்படி பேசுவேன்.
திராவிட மாடல் ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் சாதனைகள் செய்யும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர். நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டி, ஆலோசகர், உறுதுணையாக இருப்பவர் சபரீசன். அமைச்சர் உதயநிதி, சபரீசன் மீது களங்கம் சுமத்த ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனைகளை விட, இரண்டே ஆண்டுகளில் நாங்கள் அதிகம் செய்துள்ளோம். இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Exit mobile version