Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்க பாட்சா இங்க பாதிக்காது! அண்ணாமலை அதிரடி!

திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை வயதில் சிறியவராகவும், முன்னேறிய வகுப்பினரல்லாதவர்களாகவும், இருப்பதால் வழக்குகள் எதுவும் போடாமல் விட்டு வைத்திருப்பதாக விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார் .இதுகுறித்து அவர் தன்னுடைய வலைதளத்தில் வெளியிட்டு இருக்கின்ற பதிவில் கூறியிருப்பதாவது,

இந்த வெற்று மிரட்டலால் எந்தவிதமான பலனும் கிடையாது, மாநிலங்களவைக்கு மறுபடியும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது, ஆகவே சாதி வெறுப்பை விதைப்பதற்கு முயற்சி செய்து காலம் கடத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என கூறியிருக்கிறார்.

அதோடு 2 நாட்களில் 5 லாக்கப் மரணங்கள் காவல் நிலையத்திற்கு சென்றால் உயிருடன் திரும்புவோமா? என்ற அச்சத்தை தற்போது ஏற்படுத்தியிருக்கிறது முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்ற காவல்துறை.

கடந்த ஒரு வருடத்தில் ஏழு லாக்கப் மரணங்கள் காவல்துறையில் நிகழ்ந்திருக்கிறது. மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? தமிழகத்தில் அரசு இயங்குகிறதா? என்றும், அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்

Exit mobile version