தமிழக அரசியலில் திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் நபர்களில் நாம் தமிழக கட்சியை நடத்தி வரும் சீமான் முக்கியமானவர். இவரை போல திமுகவை கடுமையாக விமர்சித்தவர் யாருமில்லை என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக திராவிடத்தை அவர் கடுமையாக எதிர்க்கிறார். சென்னை மெரினா கடற்கரையை திராவிட சுடுகாடாக மாற்றிவிட்டர்கள் என சொன்னவர் சீமான்.
கடந்த 10 வருடங்களாவே யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனது கட்சி நிர்வாகிகளை தேர்தலில் நிற்க வைத்து வருகிறார். பெரும்பாலும் அதில் யாரும் டெப்பாசிட் கூட வாங்குவதில்லை. ஆனாலும், மனம் தளராது அரசியல் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு பெரியார் எதிர்ப்பை கையில் எடுத்தார். ‘இது பெரியார் மண் என்கிறார்கள். பெரியாரே எங்களுக்கு மண்தான்’ என பேசினார். இதற்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கடும் கண்டங்களை தெரிவித்தது. ஆனாலும் சீமான் அசரவில்லை.
அந்தநிலையில்தான் நடிகை ஜெயலட்சுமி சீமான் மீது கொடுத்த பாலியல் புகாரில் சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பினார்கள். ஆனால், சீமான் ஆஜராகவில்லை. எனவே, மீண்டும் அவரின் வீட்டுக்கு சென்று சம்மனை ஓட்டினார்கள். அப்போது சீமானின் பாதுகாவலர் அந்த சம்மனை கிழிக்க போலீசார் அவரை பிடித்து சென்றனர்.
மேலும், பாலியல் குற்றவாளி சீமானை கைது செய் என திக உள்ளிட்ட கட்சியில் சென்னையின் பல பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டினார்கள். விஜயலட்சுமி விருப்பப்பட்டு வந்து என்னுடன் உறவு கொண்டார். அவர் ஒரு பாலியல் தொழிலாளி என்றெல்லாம் வாய் கூசாமல் பேசினார் சீமான். இந்நிலையில், ஒரு விழாவில் சீமானை பார்த்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘அண்ணே தைரியமா இருங்க. தொடர்ந்து சண்டை போடுங்க’ என சொன்னார்.
இதுபற்றி அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘சீமான் அண்ணன் என் நண்பர். எங்களை போலவே தொடர்ந்து திமுகவை எதிர்த்து பேசி வருகிறார். எங்களுக்குள் கொள்கை முரண்பாடு இருந்தாலும், பாஜகவை விமர்சித்தாலும் மோடியை விமர்சித்தாலும் இருவரும் ஒரே வழியில்தான் செல்கிறோம். பெரியாரை பற்றி பேசினால் அவரை குறி வைத்து தாக்குதல் நடத்தி சொந்த பிரச்சனையை கிளப்பி அசிங்கப்படுத்துகிறார்கள். இப்படி செய்தால் எப்படிப்பட்ட நபராக இருந்தாலும் மனம் சோர்ந்து போகும். அதனால்தான் அவருக்கு தைரியம் சொன்னேன்’ என விளக்கமளித்திருக்கிறார்.