Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அண்ணாமலைக்கு அடிப்படை அரசியல் அறிவே கிடையாது–முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!

Annamalai has no basic political knowledge – Ex Minister Jayakumar..!!

Annamalai has no basic political knowledge – Ex Minister Jayakumar..!!

அண்ணாமலைக்கு அடிப்படை அரசியல் அறிவே கிடையாது–முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!

மக்களவை தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் அதிமுக அழிந்துவிடும் எனவும், அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் தமிழகத்தில் பாஜக தோல்வியை தழுவியது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி அளித்துள்ளார்.

 அதன்படி ஜெயக்குமார் கூறியிருப்பதாவது, “அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. அத்தனை ஆண்டுகள் அரசியல் அனுபவம் வாய்ந்த கருணாநிதியாலே அதிமுகவை அழிக்க முடியவில்லை. கத்துக்குட்டி அண்ணாமலையால் அழித்துவிட முடியுமா? அண்ணாமலை தான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக அடிப்படை அரசியல் அறிவே இல்லாமல் பேசி வருகிறார்.

 முதலில் இந்த தேர்தலுக்கு பின்னர் பாஜக தமிழகத்தில் இருக்குமா என்று பார்க்க சொல்லுங்கள். கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுகவும், நானும் தோல்வி அடைந்தோம். சனியன் தொலைந்தது என்று பாஜகவை கழட்டி விட்ட பிறகு தான் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

 அதிமுகவிற்குள் இருவேறு சமூகத்தினரிடையே மோதல் இருப்பதாக கூறி அண்ணாமலை திரித்து வருகிறார். நாங்கள் வெற்றி பெற போவது உறுதி என்பதை அறிந்துகொண்ட அவர் எங்கள் கட்சிக்குள்ளேயே பிரிவினையை ஏற்படுத்த இதுபோன்ற சூழ்ச்சியை கையாண்டு வருகிறார். உண்மையில் நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம். இந்த தேர்தலில் வெற்றி பெற்று பதிலடி கொடுப்போம்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version