ADMK BJP: அதிமுக மற்றும் பாஜக இடையேயான பணிப் போரானது குறைந்து நெருங்கிய பந்தம் உருவாகி வருகிறது. சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஓராண்டுகள் இருக்கும் நிலையில் பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்கும் என்று ஒரு தரப்பினார் கூறினாலும் அதற்கு வாய்ப்பே இல்லை என தட்டிக் கழித்து எடப்பாடி பேசி வந்தார். ஆனால் சமீபத்தில் அவரது பேச்சுக்கு ஏதும் பொருந்தாத வகையில் தான் அனைத்து செயல்பாடுகளும் உள்ளது. எடப்பாடி ஒரு பேட்டியில் கூட , மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்று கூறியிருந்தார்.
அதேபோல பாஜக அண்ணாமலையும் அதிமுக மீது எந்த ஒரு எதிர் கருத்தையும் தெரிவிப்பதில்லை. இப்படி இருக்கையில் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் திமுக தான் எங்கள் எதிரி அதை தவிர வேறு எந்த கட்சியும் கிடையாது என தெரிவித்தார் . இவ்வாறு அவர் கூறியதற்கு பாஜகவுடன் கூட்டணி வைக்கவா?? அல்லது தவெக உடன் கூட்டணி வைக்க இந்த தூதா என்று பலரும் கேட்டு வந்தனர். இப்படி எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு சுட்டிக்காட்டும் விதமாக அண்ணாமலை, நாங்களெல்லாம் அரசியலுக்கு வந்த போது நோட்டா கட்சி, அதுமட்டுமல்லாமல் பாஜக வந்ததால்தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்றெல்லாம் பேசினார்கள்.
ஆனால் தற்பொழுது எங்களிடம் கூட்டணி வைக்க வேண்டுமென்று தவம் கிடக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலை தான் நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்று மறைமுகமாகவே அதிமுகவை சாடி பேசியுள்ளார். இதற்கு எதிர் கருத்து தெரிவிக்கும் வகையில் நேரடியாகவே அதிமுக மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நாங்கள் பாஜக கூட்டணிக்காக ஒருபோதும் தவம் கிடப்பதில்லை என்று பேசியிருந்தார்.
ஆனால் அண்ணாமலை கூறியதற்கு எடப்பாடி சிறிதும் கூட அசராமல் எங்களை ஏதும் குறிப்பிட்டு அண்ணாமலை கூறவில்லை, தவறாக ஏதும் கூறாதீர்கள் என்று கூறியதோடு ஆறு மாதங்களுக்கு அப்பால் தான் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் யாருடன் கூட்டணி வைப்போம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என கூறினார்.
அண்ணாமலை அதிமுகவை தான் கூறினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இதற்கு எடப்பாடி சார்பாக தக்க பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அகிம்சை வழியில் இதனை கடந்திருப்பது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க அடித்தளமிடுவது போல் உள்ளது.