Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தன்னை தானே விளம்பரப்படுத்துபவர் தான் அண்ணாமலை!!! அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் பேட்டி!!!

#image_title

தன்னை தானே விளம்பரப்படுத்துபவர் தான் அண்ணாமலை!!! அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் பேட்டி!!!

அரசியலில் துளியும் கூட அனுபவம் இல்லாத கத்துக்குட்டி தான் பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை என்றும் அவர் தன்னைத் தானே விளம்பரம் செய்துகொள்பவர் என்றும் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் கூறியுள்ளார்.

பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். மேலும் இவருடைய சர்ச்சையான கருத்துக்கள் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் அரசியலில் அனுபவம் இல்லாத கத்துக்குட்டிதான் அண்ணாமலை அவர்கள் என்று பேட்டி அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய நத்தம் விஸ்வநாதன் அவர்கள் “அதிமுக கட்சியின் வெற்றிக்கு இதுவரை தடையாக இருந்த பாஜக கட்சி நீக்கப்பட்டுள்ளது. அரசியலில் அனுபவம் இல்லாத கத்துக்குட்டியான அண்ணாமலை அவர்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் என்று கூட பார்க்காமல் தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

தன்னைத் தானே விளம்பரப்படுத்தும் ஒரு பக்குவமில்லாத முதிர்ச்சியற்ற அரசியல்வாதி யார் என்றால் அது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தான். பாஜக கட்சியின் கொள்கைகள் மீது அதிமுக கட்சிக்கு எப்பொழுதும் உடன்பாடு என்பது சிறிதளவு கூட இல்லை. அதிமுக கட்சியின் உதவி தயவு இல்லாமல் பாஜக கட்சியில் வெற்றி பெற முடியாது” என்று கூறியுள்ளார்.

Exit mobile version