Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரூ.2,000 நோட்டு திரும்ப பெறும் விவகாரம்-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை கடிதம்!!

#image_title

ரூ.2,000 நோட்டு திரும்ப பெறும் விவகாரம்; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்

அண்ணாமலை எழுதி உள்ள கடிதத்தில் நிலையான பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான தொடர் முயற்சியாக ரிசர்வ் வங்கி நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செப்டம்பர் 30-ந் தேதி வரை அரசு திரும்ப பெறும் என தெரிவித்துள்ளது.

இதனை நாடு முழுவதும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஏனெனில் சாமானிய மக்களின் நலனுக்காக இது. தி.மு.க. அரசியல் வாதிகள் பணமோசடிக்கான புதிய வழிகளை கண்டுபிடிப்பதில் பெயர் பெற்றவர்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் மற்றும் மருமகனும் ஓராண்டில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர் என்பதை தமிழக அரசின் மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் தி.மு.க. அரசியல்வாதிகள் கூட்டுறவு வங்கிகள், டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் முறைகேடாக சம்பாதித்த ரூ.2,000-ஐ மாற்றுவார்கள். எனவே இதனை நிதி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும்‌ என‌ கூறப்பட்டுள்ளது‌.

 

Exit mobile version