Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமித்ஷா போட்ட ஆர்டர்!. அப்செட்டில் அண்ணாமலை!.. விரைவில் ராஜினாமா?…

amit shah

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்கை இப்போதே துவங்கிவிட்டனர். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார்.

ஆனால், அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் ஒரு பகை இருக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் அதன்பின் நடந்த பாராளுமன்ற தேர்தல் இரண்டிலும் அதிமுக பாகவுடன் கூட்டணியில் இருந்தது. இந்த 2 தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்தது. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் தோற்றோம் என அதிமுகவினரே சொன்னார்கள். இதனால் கோபமடைந்த அண்ணாமலை அதிமுக தலைவர்களை மோசமாக விமர்சித்தார். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது அதிமுக.

eps

இனிமேல் அதிமுகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணி அமைந்தால் நான் ராஜினாமா செய்வேன் என அப்போதே அறிவித்தார் அண்ணாமலை, இப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் இதுபற்றி பேசிய அண்ணாமலை ‘எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். அதிமுகவுடன் கூட்டணை அமைந்தால் நான் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன். அதில் மாற்றமே இல்லை. மாற்றி மாற்றி பேசும் அரசியல்வாதி நான் இல்லை. கூட்டணி பற்றி அமித்ஷா சொல்வதே உறுதியானது. எனக்கு கட்சியின் வளர்ச்சியே முக்கியம்’ என சொல்லியிருக்கிறார்.

சமீபத்தில் டெல்லி சென்ற அண்ணாமலை அதிமுகவுடன் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை சொன்னதோடு, அந்த கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்றே அவர் கூறியதாகவும், ஆனால், அதிமுகவுடன்தான் என அமித்ஷா சொல்லிவிட்டதால் அவர் அப்செட் ஆகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியெனில் நான் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை சொல்ல, அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்துவிட்டு தமிழகத்தில் வேறொருவரை பாஜக தலைவராக போடலாம் என்கிற முடிவுக்கு பாஜக மேலிடம் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version