பெஞ்சல், டங்க்ஸ்டன்.. இதற்கெல்லாம் சாட்டையை  சுழற்றாத அண்ணாமலை!! நெட்டிசன்கள் சரமாரி  கேள்வி!!

0
127
Annamalai netizens have accused Annamalai of carrying out a whip campaign to attract the media to his side

Annamalai: ஊடகங்களை தன் பக்கம் ஈர்க்க சாட்டையடி போராட்டம் நடத்தி வருகிறார் அண்ணாமலை நெட்டிசன்கள் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக 6  மாவட்டங்கள் மிகவும் பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகியது, குறிப்பாக கடலூர் மாவட்டம் கடலில் மூழ்கியது என்றே கூறலாம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. எனவே தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் மத்திய அரசின் முதல்வர் ஸ்டாலின் ரூ. 2000 கோடி வழங்க கோரிக்கை வைத்தார்.

ஆனால், அதற்கு பதிலாக ரூ.944.80கோடி மட்டுமே மத்திய அரசு கொடுத்து தமிழக மக்களை வஞ்சித்து மத்திய அரசு. இதற்கு எவ்வித கருத்துக்களும் தெரிவிக்காமல்  இருந்தார் பாஜக அண்ணாமலை. மத்திய அரசுடன் தொடர்பில் இருக்கும் டங்க்ஸ்டன் சுரங்கத்தை மதுரை மேலூர் அரிட்டாபட்டியில் அமைக்க அனுமதி வழங்கியது மத்திய அரசு. அரிட்டாபட்டி பகுதியில் உள்ள மலைக் குன்றுகள் பல்லூயிர் பெருக்கம் மற்றும் தமிழக வரலாற்று சுவடுகள் இருக்கும் பகுதியாகும்.

இங்கு சுரங்கம் அமைந்தால் 50 கிராம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே இதற்கு நியாயம் கேட்டும் ஆளும் பாஜக அரசிடம் எவ்வித விமர்சனங்களையும் முன் வைக்க விலை அண்ணாமலை. அது போலதான் திருவண்ணாமலை நிலச்சரி ல் சிக்கியவர்களுக்கு நிவாரணம் வழங்க எவ்வித குரல் எழுப்ப வில்லை. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்துக்கு  எதிராக திமுக அரசை விமர்சித்து போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல.

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய சட்ட திட்டத்தை கடுமையாக மாற்ற மத்திய அரசிடம் கோரிக்கை வைக்காமல். சமூக ஊடகங்களை தன் பக்கம் ஈர்க்க இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என நெட்டிசன்கள் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.