ADMK BJP: அதிமுக-ஐடி விங்கை பாராட்டி பாஜக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதிமுக பாஜக-வானது கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே இரண்டு பிளவுகளாக மாறியது. அதிமுக குறித்தும் மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்தும் அவதூறாக பேசியாதாலே இந்த கூட்டணி முடிவுக்கு வந்தது. இவ்வாறு இருக்கையில் ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிசாமி பாஜக-விற்கு முட்டுக்கொடுக்காமல் இனி கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என கூறி வருகிறார். ஆனால் அண்ணாமலை தனது அமெரிக்க பயணத்தை முடித்து வந்ததிலிருந்து பல மாற்றம் அடைந்துள்ளார்.
அதிமுக-வை ஏதும் சாடாமல் தொடர்ந்து நேர்மறையான கருத்துக்களையே தெரிவித்து வருகிறார். குறிப்பாக எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அவரது ட்விட்டர் பக்கத்தில் மோடியுடன் ஒப்பிட்டு பதிவு ஒன்றையும் போட்டுள்ளார். இதனால் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி இணையப் போவதாக தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இவர் வெளிநாட்டிலிருந்து வந்ததிலிருந்து அகிம்சை வழியை பின்பற்றுவதாக ஓர் பேச்சு உள்ளது.
அதன்படி தான் திமுக ஆட்சி விலகும் வரை காலனி அணிய மாட்டேன் என கூறியுள்ளார். தமிழகத்தையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்திற்காக சவுக்கடி கொடுத்து போராட்டம் நடத்தினார். இவ்வாறு இருக்கையில் பாதிக்கப்பட் பெண் ஞானசேகரன் யாரிடமோ செல்போனில் சார் சார் என்று பேசியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால் காவல் துறையோ அவர் அந்த பெண்ணை நம்ப வைக்க அப்படி பேசியுள்ளார்.
ஆனால் அந்த பெண் சொல்லும் நேரத்தில் அவரது செல்போன் ஏரோ பிளைன் மோடியில் இருந்துள்ளது என கூறியுள்ளனர். இவ்வாறு காவல் துறை கூறியதை அதிமுக-வினர் நம்பவில்லை. யார் அந்த சார் எனக் கேட்டு தொடர் போராட்டங்களை முன் வைத்து வருகின்றனர். மேற்கொண்டு பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டியும் உள்ளனர்.மேற்கொண்டு அதிமுக ஐடி விங்க சேர்ந்தவர்கள் அவென்யூ எக்ஸ்பிரஸ் மாலில் இது தொடர்பாக திடிரென்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்தும் பாஜக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். முன்னதாகவே வந்ததிலிருந்து அதிமுக-வுடன் கூட்டணி வைக்க அண்ணாமலைக்கு மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி அதிமுக கூடனையின்றி பாஜக-வாழ் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் தற்பொழுது அவரது செயல்பாடுகளில் மாற்றம் காணும் படியாக உள்ளது.