திமுகவிடம் 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை அறிக்கை! காரணம் இதுதானா? 

0
232
#image_title
திமுகவிடம் 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை அறிக்கை! காரணம் இதுதானா? 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி, மருமகன் சபரிசன் உள்ளிட்ட திமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் சகோதரி கனிமொழி உட்பட முக்கிய நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டார்.
இதனை வெளியிட்ட மறுநாளே திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாமலை பதில் சொல்லியே தீரவேண்டும், இல்லையென்றால் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும், 500 கோடி இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக முக்கிய நிர்வாகிகள் 12 பேரின் சொத்து மதிப்பு பட்டியலை வெளியிட்டவுடன் திமுக ஆர்.எஸ்.எஸ் பாரதி ஏன் பதறுகிறார். நான் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் முழு விடியோவையும் அவர் பார்த்ததற்கு நன்றி.
தமிழக முதல்வர்  ஸ்டாலின் மகள் நடத்தும் சன்ஷைன் பள்ளி, மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி உறவினர் நடத்தும் தி சென்னை பப்ளிக் பள்ளி, அமைச்சர் எ.வ. வேலு மனைவி நடத்தும் ஜீவா வேலு இன்டர்நேஷனல் பள்ளி, மற்றும் அருணை பொறியியல் மருத்துவ கல்லூரி போன்றவற்றை அவர்களது பெயரில் காண்பித்துள்ளோம். இவர்கள் வசூலிக்கும் கல்வி கட்டணத்தை திமுக தலைமையகமான அறிவாலயத்தில் ஒப்படைத்து விடுகிறார்கள் என்று கூறவில்லை. ஆர்.எஸ்.பாரதி ஏதாவது குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக, ஏன் இப்படி மழுப்பி பேசுகிறார் என்று தெரியவில்லை.
கடந்த திமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும், இது தொடர்பான சம்மன் உங்கள் கட்சி தலைவருக்கும் அதன் தொடர்புடைய அணைவருக்கும் வரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்,
நோபல் புரோமோட்டர், நோபல்  பிரிக்ஸ், நோபல் ஸ்டீல்ஸ் என்ற நிறுவனங்களில் பஷீர் முகமது என்பவர் இயக்குனராக உள்ளார். உதயநிதி ஸ்டாலின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்பு செயலாளர் எதற்காக பதில் அளிக்கிறார். நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்திற்கும்  உதயநிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் 84 கோடி ரூபாய்  பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார். என் மீதும் பாரதிய ஜனதா கட்சியின் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு, 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு தொகை தருமாறு கோருகிறேன். இதை நான் பிம்கேர்ஸ் நிதிக்கு செலுத்த விரும்புகிறேன்.
அடுத்த 48 மணி நேரத்திற்குள், என் மீதும் எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும் என்பதை மிக பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல பாஜக vs திமுக சொத்து பட்டியல் தொடர்பாக தற்போது மோதிக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளையும், இழப்பீடு தொகையாக 500 கோடி வேண்டும் என்பதையும் கூறிக்கொண்டு வருவது தமிழக எதிர் கட்சிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வேடிக்கையான ஒன்றாக உள்ளது. எனினும் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். இது இயற்கையின் நீயதி.